மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்தும் மக்களை திரட்டுவது மாவடத்திற்குட்பட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது வாகன ஏற்பாடுகள் இறுதிகட்ட பிரச்சாரம் குறித்த பல்வேறு பணிகளுக்கான ஆலோசனைகள் நத்தப்பட்டது. மேலும் சிறை முற்றுகை போராட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் அதிகப்படியான மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட துணை செயலாளர்கள் பாபு, ஆஷிக், அபுதாஹிர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அஸாருதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. #கோவையில்திரள்வோம் #நீதியைவெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_தெற்கு_மாவட்டம் 26.12.2021
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
அறந்தாங்கி மஜக இல்ல மணவிழா… MJTS சார்பில் மஞ்சள் பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு…
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம் மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினர். மேலும் திருமணத்தில் நெகிழிப் பைகள் ஒழிக்கும் விதமாகவும் துணிப்பைகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணமகன் சார்பில் இத்திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் “ பிளாஸ்டிக் தவிர்ப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் ”என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டது. இத்திருமண நிகழ்வில் விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் சாஜிதீன், மாவட்ட துணைசெயலாளர் செய்யது அபுதாஹிர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் பகுருதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி கனி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகம்மது அல்காப், சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்
மஜக சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக் பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஏ.கே.ஷாநவாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாருக், அவர்கள் கலந்து கொண்டு போராட்ட பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில் திரளான மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது எனவும், வீடு தோறும் சென்று போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, நகர நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.. #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 26.12.2021
மஜக இல்ல திருமணம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, அவர்களின் சகோதரர் திருமணம் இன்று காயல் பட்டினத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை பொதுச் செயலாலர் J.S.ரிஃபாயி, ஆகியோர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். இதில் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமார், டாக்டர் K.V.S.ஹபீப் முகம்மது, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக ஆர்வலர் வழக்கறிஞர் N.M.அஹம்மது ஸாஹிப், அவர்கள் அனைவரையும் வரவேற்றார், துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது ,நாகை முபாரக், மற்றும் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், பொருளாளர் ராசுக்குட்டி, மாவட்ட துணை செயலாளர் மீரா சாகிப் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், தென்காசி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஃபிஜ்ருல் ஹஃபிஸ் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன், ருல்பிகர் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 25.12.2021
ஜனவரி 8 கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம்! மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M. சுல்தான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக MJTS தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் MH. ஜாபர் அலி, அவர்கள் கலந்து கொண்டு ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்து பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைளை வழங்கினார். மேலும் முற்றுகை போராட்டம் தொடர்பான வாகன ஸ்டிக்கர்கள்,நோட்டீஸ், ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் சிறை முற்றுகை போராட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் A. ஷேக் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காஜா மைதீன், முகமது நிவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் M. ஆரிஃப் அப்பாஸ், N. மகேந்திரன், NMT. முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாரிஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. #கோவையில்திரள்வோம் #நீதியைவெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம் 24.12.2021