அறந்தாங்கி மஜக இல்ல மணவிழா… MJTS சார்பில் மஞ்சள் பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு…

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம் மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினர்.

மேலும் திருமணத்தில் நெகிழிப் பைகள் ஒழிக்கும் விதமாகவும் துணிப்பைகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணமகன் சார்பில் இத்திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் “ பிளாஸ்டிக் தவிர்ப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் ”என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டது.

இத்திருமண நிகழ்வில் விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் சாஜிதீன், மாவட்ட துணைசெயலாளர் செய்யது அபுதாஹிர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் பகுருதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி கனி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகம்மது அல்காப், சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், இளைஞர் அணி மாவட்ட துணைசெயலாளர் முகம்மது அலியார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்