மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க திருச்சி மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அவர்கள் தலைமையில் இன்று 01.01.2022 மாலை திருச்சியில் நடைபெற்றது. இதில் ஜனவரி 8 அன்று நடைபெற உள்ள சிறைவாசிகளின் விடுதலை கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு முன்னெடுக்க வேண்டியுள்ள இறுதி கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், வாகன ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர், சேக் அப்துல்லா, முகமது பீர்ஷா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாநகர்_மாவட்டம் 01.01.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க தஞ்சை வடக்கு மாவட்ட சார்பாக ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் இன்று 30.12.2021 மாலை அய்யம்பேட்டையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 8 அன்று நடைபெற உள்ள சிறைவாசிகளின் விடுதலை கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு முன்னெடுக்க வேண்டியுள்ள இறுதி கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், வாகன ஏற்பாடுகள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் அஹமது கபீர், மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப்ராஜா,மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் முஹம்மது மஃரூப் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர்
வேலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு..
பொன்னேரியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியது, கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயங்கள் சூறை, இயேசு சிலை உடைப்பு, டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு பேச்சு உள்ளிட்ட ஜாதி, மத நல்லிணக்கம், மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, சங்பரிவார அமைப்புகளை கண்டித்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையிலான மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். #தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 30.12.2021
நீட் தேர்வின் காரணமாக மரணித்த மாணவி துளசியின் குடும்பத்தார்க்கு மஜகவினர் நேரில் ஆறுதல்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஊமத்தநாடு என்ற கிராமத்தில் நீட் தேர்வால் பாதிக்கபட்டு உயிரிழந்த மாணவி துளசி வீட்டிற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி எஸ். ஏ.சலாம் நேரில் ஆறுதல் கூறினார். அப்போது தொலைபேசி வாயிலாக மாணவியின் பெற்றோரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆறுதல் கூறினார்கள். இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், மாவட்ட துணை செயலாளர் பைசல், அதிரை நகர நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #Mjk_it_wing #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரிடம் மஜகவினர் மனு!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு - தரைக்காடு பகுதியில் 2018 -இல் புதிய அரசு உருது துவக்கப் பள்ளி தொடங்கப்பட்டு தற்போது 134 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டியும் இதுவரை இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனவும், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் விகிதாச்சார படி ஆசிரியர்களை நியமிக்க வேண்டியும் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமலு அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஒரிரு நாட்களில் தான் நேரடியாக அந்த பள்ளியை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இவ்விவகாரத்தில் தீர்வை எட்ட அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதாக வாக்குறுதியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகர து.செயலாளர் கவுஸ் பாஷா,நகர இளைஞர் அணி பொருளாளர் அல்தாப் மருத்துவ அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான் மற்றும் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 28.12.2021.