குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரிடம் மஜகவினர் மனு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு – தரைக்காடு பகுதியில் 2018 -இல் புதிய அரசு உருது துவக்கப் பள்ளி தொடங்கப்பட்டு தற்போது 134 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டியும்
இதுவரை இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனவும்,
இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் விகிதாச்சார படி ஆசிரியர்களை நியமிக்க வேண்டியும் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமலு அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஒரிரு நாட்களில் தான் நேரடியாக அந்த பள்ளியை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இவ்விவகாரத்தில் தீர்வை எட்ட அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதாக வாக்குறுதியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நகர து.செயலாளர் கவுஸ் பாஷா,நகர இளைஞர் அணி பொருளாளர் அல்தாப் மருத்துவ அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான் மற்றும் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
28.12.2021.