மஜக திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க திருச்சி மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அவர்கள் தலைமையில் இன்று 01.01.2022 மாலை திருச்சியில் நடைபெற்றது.

இதில் ஜனவரி 8 அன்று நடைபெற உள்ள சிறைவாசிகளின் விடுதலை கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு முன்னெடுக்க வேண்டியுள்ள இறுதி கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், வாகன ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர், சேக் அப்துல்லா, முகமது பீர்ஷா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாநகர்_மாவட்டம்
01.01.2022