கோவை சிறை முற்றுகை.. மஜக மேடையை அலங்கரித்த விசிறி சாமியாரும் தேவராஜும்!

ஜனவரி:10, கடந்த ஜனவரி 8 அன்று கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற கோவை சிறை முற்றுகையில் மஜக வினர் மக்களை திரட்டி வந்ததில் ஒரு ஜனரஞ்சகம் தெரிந்தது.

பல்வேறு சகோதர சமூக மக்களையும் அரவணைத்து ;அன்பு காட்டி அழைத்து வந்திருந்தனர்.

பெண்கள் பகுதியிலும் அதை பார்க்க முடிந்தது.

கொரோனா 3வது அலையின் தொடக்கம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து பெண்கள், 75 வயதை கடந்தவர்கள், சிறுவர் – சிறுமியர் ஆகியோரை அழைத்து வர வேண்டாம் என போராட்ட குழு முதல் நாள் வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் கோவை மாநகர பெண்கள் மத, சாதி பாடுபாடின்றி நீதியின் குரலாக திரண்டிருந்தனர்.

பல சமூக மக்களையும் வரவழைத்தது, மஜக வினரின் சமூக நல்லிணக்க பண்புகளை வெளிக்காட்டுவதாக இருந்தது என ஒரு தினசரி பத்திரிக்கையின் செய்தியாளர் பாராட்டினார்.

அது போல் மேடையில் தனியரசு, திருமுருகன் காந்தி, கோவை ராமகிருட்டிணன், தோழர் தியாகு, குடந்தை அரசன், வழக்கறிஞர் பவானி மோகன், கேரள பத்திரிக்கையாளர் அனூப், என பலர் அமர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் மண்டல தலைவர் சுசி கலையரசன், நாம் தமிழர் கட்சியின் தெற்கு தொகுதி தலைவர் செல்வராஜ், மற்றும் திராவிடர் விடுதலை கழகம், நேதாஜி சங்கம், என இக்கோரிக்கையை ஆதரிக்கும் அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளும் வருகை தந்து கோரிக்கையை பலப்படுத்தினர்.

20 ஆண்டு காலம் சிறைத் தண்டனை பெற்று விடுதலையான ஈரோடு தோழர். அன்புராஜ், அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதில் ஜல்லிக்கட்டு போராட்ட குழுவை சேர்ந்த சகோதரர். தேவராஜ், அவர்களும், தஞ்சை விசிறி சாமியார், அவர்களும் பக்தி மயமாக மேடையில் அமர்ந்திருந்தனர்.

இதனால் போராட்டத்திற்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் இவர்கள் ஈர்த்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கோவை ராமகிருட்டிணன், அவர்கள் இதை பெருமிதத்துடன் தனது உரையின் போது சுட்டிக் காட்டினார்.

விசிறி சாமியார் அவர்கள் எல்லோர் மீது ரோஜா பூக்களை தூவி வாழ்த்துக்களை கூறினார்.

அவர் கைதாகி மண்டபத்தில் இருந்த போது எல்லோரும் அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கியது ‘ஹைலைட் ‘ ஆக இருந்தது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
08.01.2022