மஜக டெல்டா மாவட்ட காணொளி கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி வலிமையாக செயல்படும் மண்டலங்களில் ஒன்றான டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 8- முற்றுகை போராட்டத்திற்கான இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது.

திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு, தஞ்சை மாநகரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கான காணொளி (Z00M ) வழியான கலந்துரையாடல் கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வரையப்பட்ட சுவர் விளம்பர பணிகள், வாகன ஏற்பாடுகள், மக்கள் சந்திப்புகள் , அடிப்படை பணிகளுக்கான நன்கொடை சேகரிப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை பஸ், வேன், கார் என இம் மண்டலத்தில் 200 க்கும் அதிகமான வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் மேலும் வாகனங்கள் முன் பதிவு செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் கருத்து கூறினார்கள்.

அந்த வகையில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கோவை புறப்பட ஆயத்தமாகி உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் அழைப்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், கூடுதல் பரப்புரைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்திகழ்வில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், உள்ளிட்ட இம்மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் துணை நிர்வாகிகள் பங்கேற்று கருத்து கூறினர்.

இந்த ஆய்வில் பெருமளவு மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது தெரிய வருகிறது.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
01.01.2022