கோட்டைபட்டினத்தில் மஜக இல்ல மணவிழா மாநிலத் துணைச்செயலாளர் கோட்டை ஹாரிஸ் தம்பி திருமண நிகழ்வு தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்….

மே.05.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் கோட்டை ஹாரிஸ் அவர்களின் தம்பி மணமகன் A.முஹம்மது இமாம்தீன் B.C.A., அவர்களுக்கும், மணமகள் J.அபிலா பானு B.COM., அவர்களுக்கும் திருமணம் என்னும் நிக்காஹ் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது.

அதனை ஒட்டி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கோட்டைப்பட்டினம் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் .

முன்னதாக கோட்டை பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மஜக கொடிகள் நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டு மஜக கிளையின் சார்பில் அனைவருக்கும் வரவேற்பளிக்கப்பட்டது.

தலைவர் அவர்களுடன் மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேரா.அப்துல் சலாம், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் அறந்தாங்கி முனைவர்.முபாரக் அலி, மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை செய்யது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாசின், அப்துல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதின் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_மாவட்டம்
05.05.2024.