
செங்கை.ஜன.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்களை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர் தலைமையிலான மஜக-வினர் சந்தித்து ஜனவரி 8, கோவை மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணைச் செயலாளர் சமது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கை_வடக்கு
04.01.2022