
சென்னை.,ஜன.,05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக அடையாறு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் M.சதீதுத்தீன் பாஜில் பாகவி ஹழ்ரத் அவர்களை சந்தித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாநில பொருளாளர் இக்பால், தலைமை செயற்குழு உறுப்பினர் அபு தாஹிர், அடையார் நிர்வாகி அன்வர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
04.01.2022