வேலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு..

பொன்னேரியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியது, கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயங்கள் சூறை, இயேசு சிலை உடைப்பு, டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு பேச்சு உள்ளிட்ட ஜாதி, மத நல்லிணக்கம், மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, சங்பரிவார அமைப்புகளை கண்டித்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையிலான மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

#தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
30.12.2021