பிப்ரவரி:13., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் 3 வார்டுகளில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் போட்டியிடுகின்றனர்.அங்கு தேர்தல் பணிமனையை இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார். 8-வார்டில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்களும் 6 வார்டில் Y.சாகுல்ஹமீது அவர்களும் , 21 வார்டில் PAS.ஜெய்னுப் நாச்சியா அவர்களும் போட்டியிடுகின்றனர். பணிமனை திறப்புக்கு பிறகு வேட்பாளர்களை அழைத்து கள நிலவரங்கள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டறிந்தார். பிறகு தேர்தல் பணிக்குழுவினருடன் இனி வரும் பணிகள் குறித்து ஆலோசித்தார். பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கூத்தாநல்லூருக்கு தனி தாலுகா கிடைக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மாவிடம் கோரிக்கை வைத்து பெற்றுக் கொடுத்ததும், கூத்தாநல்லூரின் மின் பற்றாக்குறையை போக்க அன்றைய மாவட்ட அமைச்சர் மூலம் மின்மாற்றி புதிதாக அமைத்து கொடுத்ததும், மஜகவினர் 6 ஆண்டுகளாக இங்கு ஆற்றி வரும் பணிகளும் வாக்களர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன்,மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக்,மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட அணி நிர்வாகிகள் நூரூல் அமீன்,ரிஸ்வான், ஜபரூல்லா,
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
அந்தியூர் மஜக தேர்தல் கள பரப்புரை
பிப்.13.,நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அந்தியூர் பேரூராட்சியில் வார்டு எண் 2,மற்றும் 3 யில் மஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதை தொடர்ந்து மஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் ஏ.கே.ஷாநவாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு.ஷாகின்ஷா அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வீதி வீதியாகச் சென்று மஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்தில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, நகரச் செயலாளர் மைதீன் பேக், நகர பொருளாளர் பிலால் மற்றும் நிர்வாகிகள் நிசார் முஹம்மது.தங்கவேலு.அப்துல் காதர்.நகர இளைஞரணி செயலாளர் கரீம் . மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 13.02.2022
மஜக திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஜனவரி 8 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து திருப்பூர் (தெற்கு) மாவட்டம் சார்பில் தாராபுரம் நகரம், மற்றும் உடுமலை நகர, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான், ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பாபு, அபுதாஹிர், ஆஷிக், மறும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_தெற்கு_மாவட்டம் 02.01.2022
தேனியில் மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி சுற்றுப்பயணம்!!
ஜனவரி 8 அன்று கோவை சிறை முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் மஜக வினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். இன்று தேனி மாவட்டத்தில் மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம், ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மஜக வினரை சந்தித்து பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விளம்பர பணிகள், வாகன ஏற்பாடுகள், அடிப்படை பணிகளுக்கு நன்கொடை சேகரித்தல் ஆகியவை குறித்து மாவட்ட செயலாளர் கரீம், உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அவரது பொறுப்பில் உள்ள மதுரை,தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் பெருமளவு மக்களை திரட்டும் பணியில் அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இன்று அவருடன் தேனி மாவட்ட பொருளாளர் சேக் பரீத், மாவட்ட துணை செயலாளர் அம்ஜத் மீரான், கம்பம் நகர துணைச்செயலாளர் ஷாஜஹான், கம்பம் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஷாஜஹான், உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தேனி_மாவட்டம் 02.01.2022
மஜக டெல்டா மாவட்ட காணொளி கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சி வலிமையாக செயல்படும் மண்டலங்களில் ஒன்றான டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 8- முற்றுகை போராட்டத்திற்கான இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது. திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு, தஞ்சை மாநகரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கான காணொளி (Z00M ) வழியான கலந்துரையாடல் கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வரையப்பட்ட சுவர் விளம்பர பணிகள், வாகன ஏற்பாடுகள், மக்கள் சந்திப்புகள் , அடிப்படை பணிகளுக்கான நன்கொடை சேகரிப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை பஸ், வேன், கார் என இம் மண்டலத்தில் 200 க்கும் அதிகமான வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் மேலும் வாகனங்கள் முன் பதிவு செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் கருத்து கூறினார்கள். அந்த வகையில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கோவை புறப்பட