திண்டுக்கல்லில் எழுச்சியோடு நடைபெற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!

திண்டுக்கல்.ஏப்.18., இன்று மாலை 05-மணியலவில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு உரிமை மீட்புக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட பொருளாளர் M. அனஸ் முஸ்தபா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் , #INLP, #விசிக, #கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்தேசிய அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும், பாசிச சக்திகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கை கண்டித்து பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்
18/04/2018