குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று முர்காப் உடுப்பி ரெஸ்டாரெண்டில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் முன்னதாக மண்டல IKP செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. பரங்கிப்பேட்டை ஹாஜா மஹ்தூம் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மண்டலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள், திட்டங்கள், நிர்வாக ரீதியான ஆலோசணைகளை வழங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் √ கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடத்துவது. √ உம்ரா பயணம் செல்ல IKP யின் மூலம் ஏற்பாடு செய்வது. √ இரத்த தானம் முகாம் நடத்துவது. √ ரமலான் மாதத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது. √ உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. இதில் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூற இனிதாக கூட்டம் நிறைவடைந்தது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 -
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
MLAவுடன் உலமாக்கள் சந்திப்பு!
சிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…!
சிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் - தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது . தமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழச்சி.தங்கபாண்டியன் , பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உரையாற்றினர் . நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்மொழி வளர்ச்சி , இலக்கியம் , கவிதை ஆகியன குறித்து கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது . நேயர்களின் கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர் . உற்சாகம் , நகைச்சுவை , கிண்டல் , கைத்தட்டல் என நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தோழர் . இறைமதி ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். விடுமுறை நாள் அல்லாத திங்கள்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது . தகவல் தொழில்நுட்ப அணி (MJK-IT WING) சிங்கப்பூர் மண்டலம்
ரியாத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனை கூட்டம்!
ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் பொருளாலர் நிவாஜிதீன், துணைச் செயலாளர்கள் ஹாஜாமைதின், நைனார், சிக்கத்தர், சாதிக் பாஷா, முகம்மது யூசுப்தின், IT WING நிர்வாகிகள் காயல் காதர் சாகிப் (தங்க தம்பி), முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, ஒலாயா, தரயா பகுதிகளில் கிளைகள் துவங்குவது, இலவச குர்ஆன் வழங்குவது, தர்பியா நிகழ்ச்சி நடத்துவது, இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக உம்ரா செல்வதற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இன்று ரியாத் நசியா பகுதியில் கிளை துவங்கப்பட்டது. ரியாத்தில் பணிபுரியும் சகோதரர்கள் IKP-யில் சேர்ந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) ரியாத் மண்டலம்.
தம்மாம் மண்டலம் அல் ஜூபைல் கிளை கூட்டம்…
சவூதி அரேபியா தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட அல் ஜூபைல் மனிதநேய கலாச்சாரப் பேரவை கிளை மாதாந்திர கூட்டம் 03-03-2017 வெள்ளிக்கிழமை கிளை செயலாளர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பொருளாளர் எம்.ஹஜ் முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளையின் துணைச்செயலாளராக ஹஜ் முகம்மது அவர்களை நியமனம் செய்யப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், இரத்தான முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING தம்மாம் மண்டலம்