குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சல்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் இன்று 10/11/2017 வெள்ளிக்கிழமை 1 மணிக்கு (ஜும்ஆவுக்கு பின்) கத்தா 10 மஸ்ஜித் வளாகம் - சல்வாவில் நடைபெற உள்ளது மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறது. அழைப்பின் மகிழ்வில்... #MKP_மனிதநேய_கலாச்சார_பேரவை (சல்வா கிளை) #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #குவைத்_மண்டலம். 55278478-60338005-65510446.
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP)யின் அமீரக செயற்குழு கூட்டம்..!
அபுதாபி.நவ.05,. மனிதநேய கலாச்சாரப் பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் நடைபெற்றது. MKP அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரஃப் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மண்டல செயல்பாடுகள் பற்றியும் மற்றும் தலைமை நிர்வாகிகளை அழைத்து மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை தையுப் அவர்கள் நன்றியுரையாற்றினார். தகவல்: #MKP_ஊடகபிரிவு #ஐக்கிய_அரபு_அமீரகம் 04.11.2017
கத்தார் மண்டல MKPயின் புதிய நிர்வாகிகள் தேர்வு !
கத்தார்.அக்.21., மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல நிர்வாகிகள் கூட்டம் கடந்த 19-10-2017 அன்று அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மண்டல செயலாலர் : தளபதி நாகை பைசல் ரஹமான் அலைப்பேசி எண் : +974 5503 0802 மண்டல பொருளாளர் : கடலூர் யாசின் அலைப்பேசி எண் : +974 3040 2917 மண்டல துணைச் செயலாளர் : T.S புரம் சகாப்தீன் அலைப்பேசி எண் : +974 5525 9810 மண்டல துணைச் செயலாளர் : உத்தமபாளையம் உவைஸ் அலைப்பேசி எண் : +974 30161716 மண்டல துணைச் செயலாளர் : ஜூல்ஃபிகர் அலி அலைப்பேசி எண் : +974 5039 2220 ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.கிளைகள் மற்றும் உறுப்பனர்களை அதிகப்படுத்துதல் 2.எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மண்டலம் சார்பாக தாயகத்தில் இருந்து மஜக பொதுச் செயலாளரை அழைத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது.. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல்; #MKP_ஊடகபிரிவு #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம்
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம்..!
குவைத்.அக்.14., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் நேற்று 13/10/2017 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியாளவில் திருச்சி உணவகம் முர்காப்பில் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மண்டல IKP செயளாலர் சகோ.இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க. மண்டல ஊடக பிரிவு செயளாலர் சகோ.அதிரை அப்துல் சமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் தாயகத்தின் அரசியல் சூழல் மற்றும் மண்டல செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கிய பின் மண்டல பொருளாளர் சகோ. நீடூர் நபீஸ் அவர்கள் பொருளாதாரம் குறித்து விளக்கினார். இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகிகளும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. தீர்மானங்கள்: 1) எதிர் வரும் டிசம்பர் மாதம் நிகழ்ச்சி நடத்துவது. 2) இரத்த தானம் முகாம் நடத்துவது. 3)மூன்றாவது மண்டல மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முடிவை அறிவிப்பது. 4) மாதாந்திர மண்டல கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மண்டல மருத்துவ அணி
புருணையில் இந்தியர்களின் ஒன்று கூடல்!
புருணை.ஆக.25., புருணை தாருஸ்ஸலாமில் இன்று (25.08.2017) இந்திய சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி தேனீர் விருந்துடன் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA , மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் #மொவ்லா_நாசர் ஆகியோர் பங்கேற்றனர்.. மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹாஜி.மாலிக் அவர்கள் தலைமைஏற்று சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் தேனீர் விருந்துக்கு பிறகு கேள்வி பதிலுடன் கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது.. மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கூறும்போது இதற்கு முன்பு இருமுறை புருணைக்கு வந்திருந்தோம், இம்முறைதான் அதிகமான சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்திய சமூகத்தினர் பெருமளவில் வரவேற்பு கொடுத்ததாகவும், இது மனதுக்கு நிறைவாக இருந்ததாகவும் கூறினார். ஞாயிற்று கிழமை அல்லாது வெள்ளிகிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிகமான பிரமுகர்கள் பங்கேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது என்றார்கள். தகவல்: MKP ஊடக பிரிவு, புருணை மண்டலம் 25_08_17