ஜனவரி 8, 2022 அன்று பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை சிறை முற்றுகை போராட்டம் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில் சென்னையில் மஜக-வினர் தீவிரமாக களத்தில் குதித்துள்ளனர். ஆயத்த பணிகளின் தொடர்ச்சியாக இன்று மத்திய சென்னை மேற்கு, திருவள்ளுர் கிழக்கு, வட சென்னை மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளின் நேர்காணலில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்களும், மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர். ஜனவரி 8 போராட்டம் குறித்து அதிக அளவில் சுவர் விளம்பரங்கள் செய்வது குறித்தும், பரப்புரைகளில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களை திரட்டுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விரைவில் மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர் ஆகியோரும் பங்கேற்றனர். மத்திய சென்னை மேற்கு மாவட்டம்,
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
கோவை காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08, அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10, ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. அது தொடர்பாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் A.K. சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையர் பிரதிப் குமார், அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் ஜன 08, அன்று நடைபெற உள்ள கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் தொடர்பான கடிதத்தை ஆணையரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன், மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, ஆகியோர் உடனிருந்தனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongtermprisoners தகவல், #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம். 14.12.2021.
ஜனவரி_08 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..
டிச:15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்க்கு வருகை தரும் பொது செயலாளரை சிறப்பாக வரவேற்பது எனவும், மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ்,பக்கீர் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஜாவித்,ஹாரிஸ்,மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 14.12.2021
தமிழக மாணவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட!! கேரள யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி!! கோவை காவல் ஆணையரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் புகார் மனு அளித்தார்!!
டிச:14., கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சந்தித்தார், அவருடன் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இச்சந்திப்பில் சமீபத்தில் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நமது நாட்டின் முப்படை தளபதி, உட்பட 13 பேர் மரணமடைந்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டு இருந்தது அதில் ராணுவ தளபதி மரணம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக அவதூறு செய்தியை பதிவிட்டிருந்தது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கவும், மத , மோதலை தூண்டும் விதமாகவும் அவதூறு வீடியோ வெளியிட்ட இந்த யூடியூப் சேனல் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அவர்கள் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், கோவை மாநகர்
ஆளுக்கொரு நீதி… சிறைவாசிகளின் கண்ணீரை கூறும் குறும்படம்…. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு பாராட்டு…
சென்னை.டிச.14., 20 ஆண்டுகளை கடந்தும் தண்டனையை அனுபவித்து, விடுதலையாக வழியின்றி தவிக்கும் சிறைவாசிகளின் துயரம் இப்போது தமிழகத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது. தற்போது ஆலந்தூர் மொய்தீன் இயக்கத்தில், கார்த்திகேயன் மற்றும் ஜப்பார் ஆகியோரின் தயாரிப்பில் ஆளுக்கொரு நீதி என்ற தலைப்பில் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் படக்குழு மஜக தலைமையகத்திற்கு வருகை தந்து படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்தது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இக்குறும்படத்தை பார்த்து விட்டு, தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது வெளியிடப்படும் போது மக்களின் இதயங்களை உருக்கும் என்றும் கூறினார். விரைவில் இக்குறும்படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட முன்னோட்ட நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் ஷஃபி, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.12.2021