சிதம்பரம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சார்பில் சிதம்பரம் MYM பைசல் மஹாலில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) இணைப் பொதுச்செயலாளர் #K_M_முஹம்மது_மைதின்_உலவி அவர்கள் கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #A_சபியுல்லா_மன்பயி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் வழிகாட்டு தலைவர் A.E.M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் , கடலூர் மாவட்ட அரசு காஜி A. நூருல் அமீன் ஹஜ்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் K.A.M. அபூபக்கர்MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம் 05.01.2018
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!
சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சிறைத்துறை டிஜிபி அவர்களை மஜக மாநில செயலாளர் தைமியா, மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம் அகமது, மற்றும் சகோதரர் காதர் ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள். முன்னதாக சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இன்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 18.12.17
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சரை சந்தித்த மஜக நிர்வாகிகள்!!
சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களை மஜக மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம்அகமது ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள். அதை தொடர்ந்து இன்று மாலை சிறைத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 18.12.17
மஜகவின் சார்பில் மேலப்பாளையத்தில் தடையை மீறி டிச_6 ஆர்ப்பாட்டம்!
நெல்லை.டிச.08., நெல்லை கிழக்கு மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் A.கலீலூர்ரஹ்மான் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் சில மணிநேரத்திற்க்கு முன்பு ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று கூரிய காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்தனர். அதையடுத்து நிர்வாகிகள் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடையை மீரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹ்மது அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாகித், இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்லை ஹக்கீம், தலைமை நிலைய செயலாளர் அப்துல் காதர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஜாகித் சிக்கி, ஆலியப்பா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் களக்காடு நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போரட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் S.ஷேக் இப்ராஹிம், y.வாஸிம் முபாரக், k.சுபேர், S.நவாப் அலி,T.A.முஹம்மது அலி இக்பால், B.K.மீரான் மைதீன் மூலக்கரைப்பட்டி உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை
திருப்பூரில் மஜக நடத்திய ரயில் நிலைய முற்றுகை போர்!
திருப்பூர்.டிச.08.,மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடத்தப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டிசம்பர்6 அன்று மாலை சரியாக 3 மணியாளவில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு நடைப்பெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் I.ஹைதர்அலி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் M.காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் தலைமையகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை.பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினார். எழுச்சியோடு நடைபெற்ற இப்போராட்டத்தை மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி, Eரஹ்மான், E.ஈஸ்வரன், வெங்கமேடு மீரான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபல் ரிஸ்வான், மாணவர் இந்தியா பொருளாளர் A.ஆஷிக் இக்பால், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் A.முஹம்மது அஸ்கர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் V.கார்த்திக், வர்த்தகர் அணி