You are here

திருப்பூரில் மஜக நடத்திய ரயில் நிலைய முற்றுகை போர்!

image

image

image

image

திருப்பூர்.டிச.08.,மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடத்தப்பட்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டிசம்பர்6 அன்று மாலை சரியாக 3 மணியாளவில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு  நடைப்பெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் I.ஹைதர்அலி அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் M.காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் தலைமையகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை.பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

எழுச்சியோடு நடைபெற்ற
இப்போராட்டத்தை மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி, Eரஹ்மான், E.ஈஸ்வரன், வெங்கமேடு மீரான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபல் ரிஸ்வான்,
மாணவர் இந்தியா பொருளாளர் A.ஆஷிக் இக்பால், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் A.முஹம்மது அஸ்கர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் V.கார்த்திக், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் A.ஷேக்பரித், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் J.செளகத் அலி, மனித உரிமை அணி மாவட்ட துணைச்செயலாளர் ஊத்துக்குளி சாகுல் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

சகோதர சமுதாய உறவுகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் இறுதியில் மாவட்ட துணைச்செயலாளர் J.மீரான் அவர்கள்
நன்றியுரையாற்றினார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
06/12/2017.

Top