விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! 25.09.2020 முதல் 2.10.2020 வரை ஒரு வார காலத்திற்கு மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து #மஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு. வாருங்கள். உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்! இவண், #மனிதநேய_ஜனநாயக_கட்சி #தலைமையகம் 25.09.2020
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மஜக அறிவித்த படுத்து உறங்கும் போராட்டம்! தொடங்கியது தார் சாலைக்கான பணி!!
செப்.25, கறம்பக்குடியில் கடந்த இரண்டு மாத காலமாக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு தார் சாலை போடாமல் தாமத்திக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மஜக சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் வரும் 28 திங்கள் கிழமை அன்று சாலையில் படுத்து உறங்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வந்தன. இப்போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக இன்று காலை முதல் தார் சாலை போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கும், கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கறம்பக்குடி_பேரூர் #புதுக்கோட்டை_மேற்கு
குடந்தையில் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டம். மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு!
செப்.24, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் வேளாண் மசோதா நகல் எரிக்கும் போராட்டம் இன்று குடந்தையில் நடைப்பெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மஜக சார்பாக, மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, சையது இப்ராஹிம், அணி செயலாளர்கள் உபைஸ் கரீம், முஹம்மது அலி, சாஜித், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி உள்பட மஜகவினர் திரளான கலந்துக் கொண்டனர். முன்னதாக, விவசாய சட்ட மசோதாவை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மஜக சார்பில் நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம்.!
செங்கை.செப்.20., தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், அனகை நகரம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நீட்டுக்கு பலியான மாணவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர் மத்திய அரசுக்கு எதிராகவும், நீட்டை தமிழகத்தில் தடைசெய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்ஷாத், அனகை அப்துல்லா, ஆலந்தூர் சலீம், மாவட்ட அணி நிர்வாகிகள் எச்.அப்துல் சமது, த.அப்துல்லா, அனகை சலிம், நகர நிர்வாகிகள் இஸ்மாயில், கமாலுதீன், மோகன், நரேஷ், தமிழ், சேக், முஜிபுர், அன்சாரி உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு_மாவட்டம் 20-09-2020
சட்ட சபையை ஒத்தி வைக்க வேண்டும்! டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.! கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதமி முன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை.மார்ச்.20., இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்ப்பு கொண்டு வந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையே சீர்குலைத்திருக்கிறது போப் ஆண்டவர் இருக்கும் வாடிகன் தேவாலயம், புனித மெக்கா, திருப்பதி கோயில் ஆகியவற்றிலெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்றப்படுகிறது. முன் எச்சரிக்கையாக ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டும் என சொல்லும் போது, நாமும், அதை பின்பற்றும் வகையில் நமது சட்டமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைப்பதோடு, டாஸ்மாக் கடைகளையும் மூடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார் தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 20-03-2020