அக்.02, மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மஜக சார்பாக பச்சை முண்டாசு கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் கிளை செயலாளர் P.H.நத்தர் கனி தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில செயற்குழு உறுப்பினர் பேராவூரணி சலாம் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், மாவட்ட பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லா, குவைத் மண்டல நிர்வாகி S.I. சதக்கத்துல்லாஹ், மு.மா.துணைச் செயலாளர் அத்திக்கடை லியாக்கத் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
கும்பகோணத்தில் விவசாயிகள் எழுச்சி! கொட்டும் மழையில் தக்காளி விநியோகித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மஜகவினர் …
அக்.02, மத்திய அரசு கொண்டு வந்திருக்க கூடிய மூன்று வேளாண் கறுப்பு சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு வாரக்காலம் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தமிழகம் முழுக்க முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று தஞ்சை (வடக்கு) மாவட்டம் கும்பகோணத்தில் மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஒரு வார கால தொடர் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை கொட்ட தொடங்கியது. ஆயினும் பொதுச் செயலாளர் கண்டன உரையை தொடர, கூட்டம் கலையாமல் நின்றது. முன்னதாக மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் முழக்கங்களை எழுப்ப, கூட்டம் ஆர்ப்பரித்தது. நிறைவாக விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அங்கு கூடி நின்று ஆதரவளித்த பொதுமக்களுக்கு தக்காளி பைகள் விநியோகிக்கப்பட்டது. அவற்றை வரிசையில் நின்று பொதுமக்கள் பெற்றுக் கொண்டு போராட்டத்துக்கு வாழ்த்து கூறினர். விவசாய பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தாததை சுட்டிக் காட்டும் வகையில் தக்காளி பழங்கள் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது மஃரூப், இக்பால்சேட், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராகிம்
மாயவரத்தில் வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம்.
அக்.02, கார்ப்பரேட்களிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தாதே வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெறு என்ற கோரிக்கையை முன் வைத்து மயிலாடுதுறையில் முத்து வக்கீல் சாலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் மருத்துவர் சதீஸ் சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மஜக மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன் கண்டன உரையாற்றிட தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார். இதில் மு.மாவட்ட நிர்வாகிகள் மிஸ்பாஹுதீன், ஜெப்ருதீன், ஆக்கூர் கிளை பொறுப்பாளர் அமீருல் அஸ்லம் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்று வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட பொருளாளர் தைக்கால் ஷாஜஹான் நன்றி கூறினார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம்.
அறந்தாங்கியில் வேளாண் உபகரணங்களுடன் திரண்டு மஜகவினர் ஆர்ப்பாட்டம்.!
அக்.02, மத்திய பாஜக அரசின் வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து புதுகை கிழக்கு மஜக சார்பில் அறந்தாங்கியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த மஜகவினர் பச்சை முண்டாசுடன் கைகளில் மண்வெட்டி, கலப்பையுடன் திரண்டு ஆர்ப்பரித்தனர். மஜக மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் காதர் பாட்சா, மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட விவசாய சங்க செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், துணைச் செயலாளர் சையது அபுதாஹிர் முன்னிலை வகிக்க மா.து.செயலாளர் ஷாஜுதீன் வரவேற்றார். இதில் MJTS நிர்வாகிகள் முகம்மது குஞ்சாலி, ஜகுபர் சாதிக், அஜ்மீர் கான், வெள்ளைச்சாமி, அன்சாரி, செய்யது அபுதாகிர், MJVS நிர்வாகிகள் பகுரூதீன், காதர் இப்ராகிம், அணி நிர்வாகிகள் : முகம்மது யாசின், ஷாருக்கான், முகம்மது உமர், சேக் பரீத், வாசிம் அக்ரம், முகம்மது அல்காப், உதயபிரகாஷ், முகம்மது அலியார், ஷாஜஹான், முகம்மது சாலிகு, பிலிக்ஸ் ராஜ், ஆப்தீன், கவியரசன், நிஜாம் மொய்தீன், அப்துல் ஹமீது, சாகுல் அமீது, அபுதாலிபு, அப்துல் அமீது,
முத்துப்பேட்டையில் வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம். துணைப் பொதுச்செயலாளர் இராவுத்தர்ஷா பங்கேற்பு!
அக்.02, விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் அடிமையாக்குகின்ற மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முத்துப்பேட்டை நகர மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் பால்கார மைதீன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் இராவுத்தர் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் பேராவூரணி சலாம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் பஷீர் அலி, ஷாஜகான், அசாருதீன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அப்துல் மாலிக் கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதில் மஜகவினர் திரளாக பங்கேற்றனர். MJTS நகர செயலாளர் அஹமது ஆதில் நன்றி கூறினார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #முத்துப்பேட்டை_பேரூர் #திருவாரூர்_மாவட்டம்.