கோவை.நவ.13.,கோவை மாநகராட்சி 86வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து பாம்புகள் வருவதாகவும் ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் செய்தி வந்தது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் அந்த பகுதியை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று 86வது வார்டு செயலாளர் அரபாத் அவர்களின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், 77வார்டு செயலாளர் இப்ராஹிம், துணைசெயலாளர் அலி, இப்ராஹீம், 78 வது வார்டு நிர்வாகிகள் சுபேர், இத்ரீஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாக்கடைகளை தூர்வாரி மேல் தளங்கள் அமைக்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்! தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 13.11.17
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
நெய்வேலியில் மாணவர் இந்தியாவின் எழுச்சி..!
கடலூர்.நவ.08., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்தில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மாணவர் இந்தியாவில் இணைந்தனர். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் ஹுசைன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம் , தலைமை செயற்குழு உறுப்பினர் P. ஷாஜகான், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் A.மன்சூர் , நகர செயலாளர் O.A.K.நூர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனார். தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு. #கடலூர்_வடக்கு
நெய்வேலியில் மாணவர் இந்தியா சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
கடலூர்.அக்.26., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்திற்க்கு உட்பட்ட இருப்புகுறிச்சியில் உள்ள Sacret Heart higher secondary பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நேற்று 25.10.17 நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் துவக்கி வைத்தார். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், நகர செயலாளர் OAK.நூர் முகமது மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் S.அசார் ஆகியோர் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு. #கடலூர்_வடக்கு
மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம்..!
நீலகிரி.அக்.23.,மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன், ஹீசைன், இம்ரான், அஜித் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவர் இந்தியா அமைப்பின் செயல்திட்டங்கள் விளக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு #நீலகிரி_மாவட்டம்
மாணவர் இந்தியா பரங்கிப்பேட்டை நகர மாணவர்கள் கலந்துரையாடல்..
கடலூர்.அக்.22., கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் மாணவர் இந்தியாவின் மாணவர் சந்திப்பு மாவட்ட செயலாளர் முஸரப் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ரியாஸ் முன்னிலை வகித்தார். இதில் மாணவர் இந்தியா செயல் திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும், பரங்கிப்பேட்டை நகரத்தில் அமைப்பின் கட்டமைப்பு பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடக_பிரிவு #கடலூர்_தெற்கு