ஜன.29., ஈரோடு மேற்கு மாவட்ட "மாணவர் இந்தியா" சார்பாக சத்தியமங்கலத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில மஜக மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் அந்த பகுதி மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்துக் கொண்டு இரத்ததானம் வழங்கினர். மஜக துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு ஃபாருக் சிறப்புரையாற்றினார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்து மருத்துவ குழுவினை திகைப்பில் ஆற்றினர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுகளை வழங்கிய மருத்துவக்குழு தலைவர் தொடர்ந்து இதுபோன்ற சேவை பணிகளை செய்ய வலியுறுத்தினார். இறுதியாக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரை வழங்கினார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, ஈரோடு மேற்கு 29.01.17
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
மஜக தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு…
ஜன.26., மனிதநேய ஜனநாய கட்சியின் மாநில தலைமையகத்தில் நாட்டின் 68ஆவது குடியரசு தனத்தை முன்னிட்டு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். உடன் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், துணைச் செயலாளர் அப்ஸர் ஸையத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் வட சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது அசிக் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 26.01.17
காயல் நகர மஜகவின் குடியரசு தின கொடியேற்றுதல் நிகழ்ச்சி…
ஜன.26., காயல்பட்டணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயளாலர் S.M.ஜிபுரி அவர்கள் தலைமை வகித்தார், நகர பொருளாலர் M.மீரான் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் மீரா தம்பி (ஃபைசல்) அவர்கள் தேசிய கொடியேற்றினார், மாவட்ட இளைஞரனி துனை செயளாலர் முகம்மதுநஜிப் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயளாலர் ராசிக், நகர துனை செயளாலர்கள் ஜியாவுதீன் , மொகுதூம், திருச்செந்தூர் ஒன்றிய செயளாலர் மீராசா, இளைஞரனி மொகுதூம், மாணவர் இந்தியா சதாம், மனிதநேய ஜனநாய வணிகர் சங்கம் (MJVS), மனிதநேய ஜனநாய தொழிற் சங்கம் (MJTS) நிர்வாகிகள் , சீதக்காதி திடல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்சியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 26.01.17
அந்தியூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா…
ஜன.26., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக நகர இளைஞரணி சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் ஷானவாஸ் தமைதாங்கினார் , மாவட்டபொருளார் சாதிக், மாவட்டதுணை செயலாளர் ஆஸிப், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் நஜிர், தொழிலாளர் அணி மாவட்டசெயலாளர் நஜிர்பேக், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் அப்பாஸ், நகரசெயலாளர் ஷபி, பொருளாளர் மைதீன் பேக், இளைஞரணி செயலாளர் இப்ராஹிம், பொருளார் கிங் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர் 95 நபர்களுக்கு இரத்த வகை கண்டறிப்பட்டது. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி( MJK IT-WING) ஈரோடு மேற்கு மாவட்டம். 26.01.17