மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட #மீனவர்கள்_அணி செயலாளராக A. முஜிபுர் ரஹ்மான் S/o. அப்துல் மஜீத் #1270, இக்பால் தெரு, கோட்டைப்பட்டினம். மணமேல்குடி (வட்டம்) அலைபேசி : 8344668526 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்_செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 07-09-2018
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
மஜக மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் இல்லத் திருமணவிழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு..!!
நாகை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் ந.அன்வர்பாஷா அவர்கள் இல்ல திருமண விழா இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இடைவிடாத கட்சி பணிகளுக்கிடையே நேற்றைய தினம் பூருனேவில் இருந்து வந்த பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla,நாகை சட்டமன்ற உறுப்பினர் அவரின் உடல்நிலையும் பாராமல் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள் உடன் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரகத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் களந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #நாகை_தெற்கு_மாவட்டம்.
நாகை MLA அலுவலகம் மூலம் கேரளாவுக்கு நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைப்பு..! மு.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!
நாகை.செப்.06., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள்களை அளிக்குமாறு நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கோரிக்கை விடுத்தார். பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகம் என பல தரப்பிலும் இவ்வாறு நிவாரணப் பொருள்கள் நாகப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் இதற்கான முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், தொகுதி மக்கள் போர்வைகள், கைலிகள், அரிசி மூட்டைகள், பிஸ்கட் பெட்டிகள், சிறுவர் ஆடைகள், துணிமணிகள், என 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குவிந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும். நாகையிலிருந்து புறப்படும் காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மூலம் கொச்சினுக்கு அனுப்ப, லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டது. அதை தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார். இப்பொருள்களை மஜக நாகை (தெற்கு) மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் பத்து பேர் கொண்ட மஜக குழு, கேரளாவுக்கு எடுத்து செல்கிறது அங்குள்ள அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மூலம் கொச்சின், அலுவா போன்ற பகுதிகளில் வினியோகப்பட உள்ளது. ஏற்கனவே தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தனது 1 மாத சம்பளத்தை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! மஜக கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இதை தமிழக அரசு காலதாமாதயின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை நினைவு கூர்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களிடம் நானும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் இதே கோரிக்கையை பல முறை வலியுறுத்தி இருக்கிறோம். அதன் விளைவாகவே பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம். எனவே இவர்களின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் வரலாறு, முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்து செல்லும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே 7 பேரையும் சோனியா காந்தியின் குடும்பம்
காவிரி தொலைக்காட்சி “ஆசான்” விருது வழங்கும் நிகழ்ச்சி! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
சென்னையில் காவிரி தொலைக்காட்சி சார்பில் அதன் இரண்டாமாண்டை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் சிறப்பு சாதனைகளை செய்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு "ஆசான்" விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், Sp வேலு மணி, செங்கோட்டையன், மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, இயக்குனர் வசந்த், பாடலாசிரியர் விஜய் உள்ளிட்டோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். விருதை வழங்கிய மு.தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துரை வழங்கி பேசியதாவது... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார் அப்துல் கலாம் . அவரது பொன் மொழியை இளைய தலைமுறையிடம் வார்த்தெடுப்பது ஆசிரியர்கள் தான். அதுவும் அரசு பள்ளிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் வீட்டு பிள்ளைகள் தான் அதிகம் படிக்கிறார்கள். அங்குதான் தமிழும் பாதுகாக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது. அங்கு படிப்பவர்களை வார்த்தெடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை, காவேரி தொலைக்காட்சி, தேர்வு செய்து விருது கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் நினைத்திருந்தால் மேட்டுக்குடி பள்ளிகளையும், மேட்டுக்குடி வர்க்கத் தினரையும் தேர்வு செய்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. ஊக்குவிப்பனை ஊக்குவித்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான். என கவிஞர் வாலி எழுதினார். அரசுப் பள்ளி ஆசிரியர்களை காவேரி தொலைக்காட்சி விருது வழங்கி ஊக்குவிப்பதற்காக அவர்களை பாராட்டுகிறேன். விருது