மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தை இன்று மாலை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திறந்து வைத்தார். முன்னதாக தலைமையகம் அருகே கட்சிக் கொடியை பொருளாளர் ஹாரூன் ரசீத் அவர்களும், இப்றாகிம் சாஹிப் தெருவில் கட்சிக் கொடியை அவைத் தலைவர் நாசர் உமரி அவர்களும், ஏற்றி வைத்தார்கள். இந்நிகவில் மாநில செயலார்கள் நாச்சிகுளம் தாஜுதீன், N.A.தைமியா, சாதிக் பாட்ஷா, மாநில துனை செயலாளர்கள் புதுமடம் அனீஸ், புதுச்சேரி அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகுத்தனர். இளைஞர் அணி மாநில செயலாளர் ஷமிம் அஹ்மது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லவரம் ஷஃபி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஹாலித், பிஸ்மி, ஹூசைன், தமீம் ரோஸ்லான், அஸார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மஜக : தகவல் தொழில் நுட்ப அணி (MJK IT-WING) சென்னை
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா… நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
ஜன.26., நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை. மாலி, பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 26.01.17
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா.
ஜன.26., நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தேசிய கொடியை நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றி வைத்தார் . அதன் பிறகு உரையாற்றி , உறுதி மொழி முழக்கங்களை எழுப்பி நிறைவாக இனிப்புகளை வழங்கினார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 26-01-2017
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகள்…நாகை MLA பங்கேற்பு .!
ஜன.26., இன்று காலை 8 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றல் , விருது வழங்குதல் , நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியன நடைபெற்றது . இதில் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 26-01-2017
குடியரசு தின வாழ்த்துக்கள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை) இந்தியாவின் 68 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் நாமும் இடம் பெற்றிருக்கின்றோம் என்பது மன நிறைவு தருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை அடிப்படையில் நம்நாடு அனைவரையும் இணைத்திருக்கிறது. மதவெறி, சாதி வெறி, வன்முறைகள், பயங்கரவாதம் ஆகியவற்றை கடந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்நாளில் மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்க்குபாடுபட உறுதி ஏற்ப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள். இவண், M. தமிமுன் அன்சாரி M L A., பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி.