மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! என்னுடைய தொகுதி கோரிக்கைகளுக்கு நான் நேரிடையாக வர விரும்புகின்றேன். என்னுடைய நாகப்பட்டினம் தொகுதிக்கு அருகிலே, புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் அமைந்திருக்கிறது. நாகூருக்கும், காரைக்காலுக்கும் இடையிலே MARG என்ற தனியார் நிறுவனத்தின் துறைமுகம் இருக்கிறது. அந்த தனியார் துறைமுகத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றபோது, சுட்டிகாட்டப்பட்ட எந்த விதிகளையும் அந்த MARG தனியார் துறைமுக நிறுவனம் பின்பற்றவில்லை, அதனால் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றபோது, தூசிகள் எழுந்து நாகூர், பட்டினச்சேரி, மேலவாஞ்சூர் போன்ற பகுதிகளில் வாழக்கூடிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காலையில் கொடிகளிலே துணிகளை காயவைத்தால் மாலை வந்து பார்க்கின்றபோது, அந்த துணிகள் கறுப்பாக இருக்கின்றன. செருப்பில்லாமல் நடந்து சென்றால் கால்கள் கருப்பாகி விடுகின்றன. தோல் நோய்கள் ஏற்படுகின்றன; நுரையீரல் சுவாசக்கோளாறுகள் ஏற்படுகின்றன. பல சமூக சிக்கல்களிலே நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர். நாகூருக்கு சுற்றுலா வரக்கூடிய மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கிய இந்த அரசு, இந்த விஷயத்திலே கவனம் செலுத்தி புதுச்சேரி அரசுடன் பேசவேண்டும்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
சட்டமன்றத்தில் இன்று : மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை!
மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை! மாணவர் போராட்டத்தை தைப்புரட்சி என்றும் தமிழர்களின் வசந்த காலம் என்றும் வாழ்த்து! சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் ! இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா பின் லேடன் படத்தை காட்டியதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் OPS அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார். இன்று (30/1/2017) சட்டமன்றத்தில் அது குறித்து பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஒஸாமா பின்லேடன் படத்தை மெரினா மாணவர் போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை. சென்னையில் ஒரு சாலையில் சென்ற பைக்கில் அந்த படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப்படத்தைத் தான் அதிகாரிகள் முதல்வரிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றார். மாணவர் போராட்டதிற்க்கும் அந்த படத்திற்க்கும் சம்பந்தமில்லை என்று விளக்கி அவையை பரபரப்பில் ஆழ்த்தினார். உடனே முதல்வர் திரு OPS அவர்கள் எழுந்து அதுகுறித்து விசாரிக்க சொல்லியிருப்பதாகவும், விசாரனை அறிக்கையில் அது தெரிய வரும் என்றும், தான் எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் பதிலளித்தார்.
காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா!
ஜன.29., காங்கிரஸ் பிரமுகர் சித்திக் மகன் நவாஸ் அவர்களின் திருமண நிகழ்வு சேலத்தில் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி தங்கபாலு, மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு MLA, காங்கிரஸ் பிரமுகர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) சேலம் 29.01.17
தொண்டி பள்ளிக்கூட விழாவில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
ஜன.28., தொண்டியில் அல் ஹிலால் மெட்ரிக் , அல் ஹிலால் நர்சரி , அமீர்சுல்தான் மெட்ரிக் மற்றும் முனவ்வரா நடுநிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்களில் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர்களாக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் K.அப்துல் சமது , அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் S. இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தனர் . இந்நிகழ்வில் இக்கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் அல்ஹாஜ் T.M. அமீர் சுல்தான் , அல்ஹாஜ் M. அப்துல் ரவூப் , ஜனாப் A.R.காமில் ஃபரீத் மற்றும் ஊர் பிரமுகர்களும் பங்கேற்றனர் . மாணவ-மாணவிகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing), இராமநாதபுரம் மாவட்டம். 28.01.17
நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சிகள்…. நாகை MLA பங்கேற்ப்பு!
ஜன.28., நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24 வது ஆண்டு விளையாட்டு நாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினன் M. தமிமுன் அன்சாரி M.A., MLA., அவர்கள் பங்கேற்று, தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளளரும், அமீரக தொழிலதிபருமான திரு.ஷேக் தாவூது மரைக்காயர், DSP திரு. புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி திரு. சிவா, பள்ளி நிறுவனரும், தொழிலதிபருமான M.S.J. அப்துல் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாநில அளவில் பல போட்டிகளில் தொடர்ந்து வென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 28.01.17