சென்னை. செப்.03., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் காஞ்சி வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி பொறுப்புக் குழு தலைவர் முஹம்மது யாகூப் அவர்களின் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட பகுதிக்குள் உட்பட்ட பல்லாவரம் , பம்மல், கண்டோன்மெண்ட் ஆகிய நகரங்களில் வசூல் செய்த ₹27,600 ரூபாயை மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களிடம் மஜக தலைமையகத்தில் வைத்து நிவாரண நிதியை ஒப்படைத்தனர்.
இதில் பல்லாவரம் அப்துல்லா , கண்டோன்மெண்ட் அப்துல் சமது , சுல்தான் மற்றும் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கண்டோன்மெண்ட் நகரை சேர்ந்த முஸ்தபா மொபைல் கடை உரிமையாளர் முஸ்தபா அவர்கள் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையாகம்
03.09.2018