நாகை.ஆக.25., நாகப்பட்டினத்தில் இன்று நெகிழி (Plastic) பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க கோரியும், மாற்று தயாரிப்புகளை பயன்படுத்த கோரியும் மாணவ. , மாணவிகள் பங்கேற்ற பரப்புரை ஊர்வலத்தை அமைச்சர் o.S. மணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 25.08.18
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
குல்தீப் நய்யார் மறைவு! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் செய்தி) விடுதலை போராட்ட வீரர், சமய நல்லிணக்கவாதி, பத்திரிக்கையாளர் என்று வலம் வந்த குல்தீப் நய்யார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. தேசப்ப்பிரிவினையின் போது காந்தியடிகளின் வழிநின்று வரலாற்று காயங்களுக்கு மயிலிறகால் மருந்து தடவிய மாமனிதர் அவர்! நெருக்கடி நிலையை நாடு சந்தித்த போது , ஜனநாயகம் காக்க , மற்றொரு சுதந்திரப் போரை நடத்தியவரில் அவரும் ஒருவர். எந்த நிலையிலும் மதச்சார்பின்மை, சமூகநீதி, போன்ற தத்துவங்கள் பலமிழக்க கூடாது என்று கருதியவர். மாநிலங்களவை உறுப்பினராக அவர் பணியாற்றியப்போது அவர் முன் வைத்த கருத்துகள் ஜனநாயக்கத்திற்கு அழகு சேர்ப்பவையாகும். அவரது கட்டுரைகள் யாவும் "அரசியல் அறிவியலில் " இடம் பெறத் தகுதியானவை. இன்று இந்தியா, வகுப்பு வாதிகளின் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள காலக்கட்டத்தில், அவரின் இழப்பு இந்திய ஜனநாயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் மஜக பங்கேற்கிறது . அத்துடன் , அவரை சார்ந்தவர்களுக்கும், அவரது ஆதரவு கொள்கை வாதிகளுக்கும் எமது ஆழமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர் #மனிதநேய ஜனநாயக கட்சி 25.08.2018
மஜகவின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்துச் செய்தி) தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஈதுல் அல்ஹா எனும் பெயரில் உலகமெங்கும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். உலக மக்கள் போற்றும் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தான் கண்ட கனவின்படி, தனது அருமை மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை நரபலி கொடுக்க முயன்றார். அப்போது இறைவனிடமிருந்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கட்டளை பிறந்தது. அதற்கு பகரமாக ஆடு ஒன்றை பலியிடுமாறு ஆணைவந்ததும் அவ்வாறே செய்தார்கள். நரபலி தடுத்து மனிதநேயம் காத்திட்ட இந்த மாபெரும் நிகழ்வே தியாக திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆடு, மாடு, ஒட்டகங்களை இறைவனுக்காக பலியிடும் நிகழ்வு ஒவ்வொரு பக்ரீத் பண்டிகையிலும் வருடம் தோறும் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையும் பாதுகாக்கப்படுகிறது என்பது ஒரு அறிவியல் செய்தியாகும். புனித ஜம், ஜம் தண்ணீரின் வரலாறும் இங்கிருந்தே தொடங்குகிறது. தியாகங்களே வரலாறுகளாகின்றன. பிறருக்காக நாம் நம்மை அர்ப்பணிக்கின்ற போதும், சேவையாற்றுகின்ற போதும் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இந்நன்னாளில் கேரளாவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்கள் மீட்சி பெறவும்,
ஒரு மாத MLA சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கினார் நாகை MLA தமிமுன் அன்சாரி! மேலும் நிவாரண உதவிப் பொருள்களை அளிக்குமாறு தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்!
நாகை.ஆக.20., இன்று (20.08.2018) நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியாதவது : எமது மனிதநேய ஜனநாயக கட்சியினரின் அறிவுறுத்தலின் படி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது 1 மாத MLA சம்பளத்தை நிவாரண உதவிக்காக வழங்குகிறேன். மேலும் நாகப்பட்டிணம் தொகுதிக்குட்பட்ட மக்கள் கேரளவுக்காக தங்களது நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகிறேன். கைலிகள், நைட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், நாப்கீன்கள், பிஸ்கட் பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலை 11 முதல் மாலை 7 மணி வரை நாகை MLA அலுவலகத்தில் இன்றிலிருந்து 1 வாரத்திற்குள் வழங்கலாம். பழைய பொருள்களை தவிர்க்க வேண்டுகிறோம். இப்பொருள்கள் நாகையிலிருந்து ரயில் மூலம் கேரளா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கேரளாவின் வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து, துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். எல்லா உதவிகளையும் கேரள மக்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வெறும் 500 கோடியை மட்டும் மத்திய அரசு கேரளாவுக்கு ஒதுக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு மாற்றான் தாய் மனநிலையில் செயல்படுவதாக சந்தேகம் வருகிறது. அங்கு 20 ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை
ஒரு மாத MLA சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கினார் நாகை MLA தமிமுன் அன்சாரி! மேலும் நிவாரண உதவிப் பொருள்களை அளிக்குமாறு தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்!
நாகை.ஆக.20., இன்று (20.08.2018) நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியாதவது : எமது மனிதநேய ஜனநாயக கட்சியினரின் அறிவுறுத்தலின் படி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது 1 மாத MLA சம்பளத்தை நிவாரண உதவிக்காக வழங்குகிறேன். மேலும் நாகப்பட்டிணம் தொகுதிக்குட்பட்ட மக்கள் கேரளவுக்காக தங்களது நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகிறேன். கைலிகள், நைட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், நாப்கீன்கள், பிஸ்கட் பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலை 11 முதல் மாலை 7 மணி வரை நாகை MLA அலுவலகத்தில் இன்றிலிருந்து 1 வாரத்திற்குள் வழங்கலாம். பழைய பொருள்களை தவிர்க்க வேண்டுகிறோம். இப்பொருள்கள் நாகையிலிருந்து ரயில் மூலம் கேரளா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கேரளாவின் வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து, துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். எல்லா உதவிகளையும் கேரள மக்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வெறும் 500 கோடியை மட்டும் மத்திய அரசு கேரளாவுக்கு ஒதுக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு மாற்றான் தாய் மனநிலையில் செயல்படுவதாக சந்தேகம் வருகிறது. அங்கு 20 ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக