மஜகவின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்துச் செய்தி)

தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஈதுல் அல்ஹா எனும் பெயரில் உலகமெங்கும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

உலக மக்கள் போற்றும் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தான் கண்ட கனவின்படி, தனது அருமை மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை நரபலி கொடுக்க முயன்றார். அப்போது இறைவனிடமிருந்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கட்டளை பிறந்தது. அதற்கு பகரமாக ஆடு ஒன்றை பலியிடுமாறு ஆணைவந்ததும் அவ்வாறே செய்தார்கள்.

நரபலி தடுத்து மனிதநேயம் காத்திட்ட இந்த மாபெரும் நிகழ்வே தியாக திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ஆடு, மாடு, ஒட்டகங்களை இறைவனுக்காக பலியிடும் நிகழ்வு ஒவ்வொரு பக்ரீத் பண்டிகையிலும் வருடம் தோறும் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையும் பாதுகாக்கப்படுகிறது என்பது ஒரு அறிவியல் செய்தியாகும்.

புனித ஜம், ஜம் தண்ணீரின் வரலாறும் இங்கிருந்தே தொடங்குகிறது.

தியாகங்களே வரலாறுகளாகின்றன. பிறருக்காக நாம் நம்மை அர்ப்பணிக்கின்ற போதும், சேவையாற்றுகின்ற போதும் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.

இந்நன்னாளில் கேரளாவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்கள் மீட்சி பெறவும், உலகமெங்கும் பல்வேறு துயரங்களால் அல்லல்பெறும் மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் எமது தியாக திருநாள் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
21.08.2018