எழுச்சியோடு நடைப்பெற்ற தொழிற்சங்க தொடக்க விழா..! தொழிற்சங்க பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் மாநில பொருளாளர்..!

திருவள்ளூர்.ஆக.21., திருவொற்றியூர் பகுதி சென்னை குடிநீர் வழங்கல் லாரி ஓட்டுநர்கள் தொழிற்சங்க தொடக்க விழா பகுதி தலைவர் ராஜா தலைமையில் நடைப்பெற்றது.
மஜக மாவட்ட செயலாளர் S.M.நாசர்,மாவட்ட பொருளாளர் ஜாஃபர் அவர்கள் முன்னிலை வகித்தனர்.தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கதிர் உசேன் வரவேற்பளித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் ஹாருன் ரசீது அவர்கள் பங்கேற்று தொழிற்சங்க பெயர்ப்பலகையை திறந்து வைத்து கொடி ஏற்றினார்.

தொழிற்சங்க மாநில தலைவர் பம்மல் சலீம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு அன்பளிப்பு வழங்கினர்.

மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் அவர்கள் நிர்வாகிகளை கௌரவித்து சால்வை அணிவித்தனர்.

தொடர்ந்து தொழிலாளர்களின் குறையை கேட்டறிந்த மாநில பொருளாளர் அவர்கள் உடனடியாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் திருவொற்றியூர் பகுதி தொழிற்சங்க அலுவலக பதிவேட்டில் வருகை பதிவு செய்தார்.

நிகழ்வில் பகுதி,கிளை தொழிற்சங்க நிர்வாகிகள்,லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்