நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்றதும் #M_தமிமுன் அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுமக்கள் அவருடம் மனுக்கள் கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் மின்சாரம் பட்றாகுறையால் (LOW VOLTAGE) மின்சாதன பொருட்கள் எல்லாம் பளுதாகி விடுவதால் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து தறுமாறு கோரிக்கை வைய்தனர். உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அந்த மனு அனுப்பபட்டு அதிகாரிகளையும் தெடர்பு கொண்டு புதிய டிரான்ஸ்பாரம் அமைக்க உத்தரவு விட்டார். தற்போது பணிகள் நடைப்பெறுகின்றது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்… மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழியூர், சங்கமங்கலம், பெருங்கடப்பனூர், பாலையூர், ஐவநல்லூர் கிராமங்களுக்கு ம.ஜ.க. பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார். வறட்சி பாதித்த பகுதிகளையும், வறண்டு கிடக்கும் நிலங்களையும் பார்வையிட்டவர், விவசாயிகள் இயற்க்கை இழப்புகளை நம்பிக்கையுடன் எதிர்க் கொண்டு வாழ்ந்து போராடும் உறுதியை பெறவேண்டும் என்று ஆறுதல் கூறினார். நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை 100% வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும், விவசாயிகளின் பிரச்னையை அரசின் கவனத்திற்க்கு விரைந்துக் கொண்டு செல்வதாகவும் கூறினார். விவசாய இழப்புகளால் அதிர்ச்சி அடைந்து உயிரிழந்த விவவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கவூம் பரிந்துரைப்பதாக அவர்களிடம் கூறினார். விவசாய சங்கங்களின் தலைவர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், ம.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லாஹ், தொகுதி செயலாளர் தமிஜுதீன், ஒன்றிய செயலாளர் ஜாகிர், அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் பங்குப் பெற்றனர். தகவல்; ம.ஜ.க. ஊடகப்பிரிவு, நாகை தெற்கு மாவட்டம்.
நாகூர் தர்காவுக்கு சுற்றுலா வந்தவர்கள் குளிக்க சென்றபோது பரிதாபம் : நாகை எம்.எல்.ஏ நேரில் சென்று உடலை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்…
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா பேலூர் நபிகள் நாயகம் தெரு ஹிமாயூன் அவர்களுடைய மகன் சைய்யது மற்றும் அவரது நண்பர் முஹம்மது பாரூக் இருவரும் நாகூர் தர்காவுக்கு சுற்றுலா வந்தவர்கள் கடற்கறையில் குளிக்க சென்றனர். இதில் சைய்யது கடல் அலை அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக தீயணைப்பு நிலையத்திர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புதுறையினர் கடலில் இழுத்து செல்லப்பட்டவரை மீட்டனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்து நாகை MLA தமிமுன் அன்சாரி அவர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்றார். உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு உடல் எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளைக்கு தகவல் தெரிவிக்க சொன்னார். அதன் அடிப்படையில் நாகூர் TNTJ ஆம்புன்ஸ் உடனடியாக நாகூர் கடற்கரைக்கு வந்து உடலை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்னர் சேலம் மாவட்ட மஜக செயலாளரை இப்ராஹிமை தொடர்பு கொண்டு சம்பந்தபட்ட குடும்பத்தினர்க்கு தகவல் தெரிவித்து தேவையான உதவிகளை செய்யுதாறு கேட்டுக்கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆலோசனை!
நாகப்பட்டிணம் தொகுதியில் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. எதிர்வரும் கோடைக் காலத்தில் நெருக்கடியை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதுகுறித்து முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவானந்தம், நாகை நகராட்சி முன்னாள் சேர்மன் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோருடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, இதுகுறித்து கலெக்டரையும் நேரில் சந்தித்து பேசினார். ஓடாச்சேரி, வாண்டையார் இருப்பு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் ஆழ்துளை குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 02.01.17
நாகை EGS பிள்ளை கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா…
நாகை தொகுதியில் இயங்கி வரும் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரம் பேர் அமரும் கலையரங்கத்தை அமைச்சர் O S மணியன் திறந்து வைத்தார். அதன் மூன்று வாயில்களை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் S. பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். பிறகு மரக் கன்றுகளையும் நட்டனர்.பிறகு EGS பிள்ளை கலைக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாமை தமிமுன் அன்சாரி MLA. திறந்து வைத்தார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 2_01_17