சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா பேலூர் நபிகள் நாயகம் தெரு ஹிமாயூன் அவர்களுடைய மகன் சைய்யது மற்றும் அவரது நண்பர் முஹம்மது பாரூக் இருவரும் நாகூர் தர்காவுக்கு சுற்றுலா வந்தவர்கள் கடற்கறையில் குளிக்க சென்றனர்.
இதில் சைய்யது கடல் அலை அடித்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக தீயணைப்பு நிலையத்திர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புதுறையினர் கடலில் இழுத்து செல்லப்பட்டவரை மீட்டனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
தகவல் அறிந்து நாகை MLA தமிமுன் அன்சாரி அவர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்றார். உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு உடல் எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளைக்கு தகவல் தெரிவிக்க சொன்னார்.
அதன் அடிப்படையில் நாகூர் TNTJ ஆம்புன்ஸ் உடனடியாக நாகூர் கடற்கரைக்கு வந்து உடலை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
பின்னர் சேலம் மாவட்ட மஜக செயலாளரை இப்ராஹிமை தொடர்பு கொண்டு சம்பந்தபட்ட குடும்பத்தினர்க்கு தகவல் தெரிவித்து தேவையான உதவிகளை செய்யுதாறு கேட்டுக்கொண்டார்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.