விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்… மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழியூர், சங்கமங்கலம், பெருங்கடப்பனூர், பாலையூர், ஐவநல்லூர் கிராமங்களுக்கு ம.ஜ.க. பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M. தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார்.
வறட்சி பாதித்த பகுதிகளையும், வறண்டு கிடக்கும் நிலங்களையும் பார்வையிட்டவர், விவசாயிகள் இயற்க்கை இழப்புகளை நம்பிக்கையுடன் எதிர்க் கொண்டு வாழ்ந்து போராடும் உறுதியை பெறவேண்டும் என்று ஆறுதல் கூறினார்.

நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை 100% வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும், விவசாயிகளின் பிரச்னையை  அரசின் கவனத்திற்க்கு விரைந்துக் கொண்டு செல்வதாகவும் கூறினார்.

விவசாய இழப்புகளால் அதிர்ச்சி அடைந்து உயிரிழந்த விவவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கவூம்  பரிந்துரைப்பதாக அவர்களிடம் கூறினார்.

விவசாய சங்கங்களின் தலைவர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், ம.ஜ.க.  விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லாஹ், தொகுதி  செயலாளர் தமிஜுதீன், ஒன்றிய செயலாளர் ஜாகிர், அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் பங்குப் பெற்றனர்.

தகவல்;
ம.ஜ.க. ஊடகப்பிரிவு,
நாகை தெற்கு மாவட்டம்.