You are here

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மூன்றுகட்சிகள் கூட்டுப் போராட்டம் …

image

image

M.தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA,தனியரசு MLA கூட்டாக அறிவிப்பு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாம் ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக் கோரி எதிர்வரும் 13_01_17 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரையில் மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை,தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்த விருக்கின்றன.

இதை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA,தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதில் சாதி,மத கட்சி சார்பற்று அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது.

10_01_17

Top