நாகப்பட்டினத்தில் இருக்கும் அரசு நூலகத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளையும், அலுவலர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அங்கு வருகை தந்திருந்த வாசகர்களிடம் உரையாடினார். கணிணி பயன்பாட்டை மேம்படுத்துதல், கூடுதல் மின்சார வெளிச்சத்தை உருவாக்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வாசகர்கள் கூறினர். 6 மாதத்திற்குள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக MLA அவர்கள் வாக்களித்தார்கள். இந்நிகழ்வில் முன்னாள் சேர்மன் மஞ்சுளா, மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், நாகை நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 15.3.17
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
முத்துகிருஷ்ணன் தாயாருக்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…
சேலம்.மார்ச்.15., டெல்லியில் நேற்று சேலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அறித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று மாலை சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள முத்து கிருஷ்ணன் இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். தலித் மாணவர்கள் மீது நவீன தீண்டாமை தற்பொழுது வட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உருவாகியுள்ளது எனவும், இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும், முத்து கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ மூலம் நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும் என்றும், அதுவரை அனைத்து தோழமை சக்திகளுடன் இணைத்து மஜக பேராடும் என்றும் உறுதியளித்தார். மேலும், மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய அதிகப்படியான இழப்பீட்டு தொகையினை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் வாயிலாக சட்டமன்றத்தில் பேசி பெற்றுதருவதாகவும் மாணவரின் குடும்பத்தினரிடம் வாக்குறுத்தியளித்தார். இதில் சேலம் மாவட்டச் செயளாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் S. சைய்யத் முஸ்தபா, A.ஷேக்ரஃபிக், O.S.பாபு, A.அம்ஷத்
நாகை மீனவர்கள் உண்ணாவிரதம்… அமைச்சர்களுடன் நாகை MLA நேரில் வருகை!
நாகை. மார்ச்.14., நாகப்பட்டினத்தில் 5 மாவட்ட மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராகவும், மீனவர்களின் படகுகளை மத்திய அரசு மீட்டுத்தரக் கோரியும், அவர்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இன்று (14.3.17) மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி ஆகியோர் நேரில் சென்று மீனவ தலைவர்களுடன் உரையாடினர். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம், தமிழக அரசு கண்டிப்பாக வலியுறுத்தும் என்று கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
இலங்கையிலிருந்து 77 மீனவர்கள் வருகை… அமைச்சர்கள் மற்றும் நாகை MLA வரவேற்பு!
காரைக்கால்.மார்ச்.14., நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த, இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 77 மீனவர்கள் இன்று காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். அவர்களை நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறிதுறை அமைச்சர் O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி, மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.14.3.17.
திண்டுக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA பேட்டி!
திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்...! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும். வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும். மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது. இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை