முத்துகிருஷ்ணன் தாயாருக்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…

சேலம்.மார்ச்.15., டெல்லியில் நேற்று சேலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனை அறித்த  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று மாலை சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள முத்து கிருஷ்ணன் இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தலித் மாணவர்கள் மீது நவீன தீண்டாமை தற்பொழுது வட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உருவாகியுள்ளது எனவும்,  இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். 

மேலும், முத்து கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ மூலம் நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும் என்றும், அதுவரை அனைத்து தோழமை சக்திகளுடன் இணைத்து மஜக பேராடும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய அதிகப்படியான இழப்பீட்டு தொகையினை மஜக பொதுச்செயலாளரும்,  நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் வாயிலாக சட்டமன்றத்தில் பேசி பெற்றுதருவதாகவும் மாணவரின் குடும்பத்தினரிடம் வாக்குறுத்தியளித்தார்.

இதில் சேலம் மாவட்டச் செயளாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் S. சைய்யத் முஸ்தபா, A.ஷேக்ரஃபிக், O.S.பாபு, A.அம்ஷத் அலி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முனவர் கான், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் K.சதாம் உசேன், மஜக வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் முகம்மது அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயளாளர் A.அப்ரார் பாஷா, மாவட்ட பொருளாளர் U.அமீர்உசேன், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் பியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் : 

மஜக தகவல் தொழில்நுட்ப அணி,

#MJK_IT_WING

சேலம் மாவட்டம்

15.03.2017