நாகை. நவ.30.,நேற்று (29.11.17) நாகப்பட்டினம் துறைமுக அலுவலகத்திற்கு வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ.மானேக்ஷா அவர்களை சந்தித்து புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார். முதலாம் எண் கூண்டு, இரண்டாம் எண் கூண்டு, மூன்றாம் எண் கூண்டு என 10 வரைக்கான விளக்கங்களையும், செயல் முறைகளையும் கேட்டறிந்தார். வானிலை மையமும், மாவட்ட கலெக்டர் அலுவலகமும் இணைந்து தகவல்களை பரிமாறிய பிறகே புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவதாக அங்கிருந்த அதிகாரிகள் விளக்கமளிந்தனர். பிறகு நாகை துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தற்பொழுது தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பாமாயில் கப்பல்களில் இறக்கப்படுவதாக கூறினார்கள். துறைமுக செயல்பாடுகளை அதிகரிப்பது குறித்தும், துறைமுகத்தை மேம்படுத்துவதும் குறித்தும் திட்ட அறிக்கைகளை தருமாறும், இது குறித்து தமிழக அரசுடன் தொடர்ந்து பேசி நடவடிக்கைகளை மேம்படுத்த துணை நிற்பதாகவும் M.தமிமுன் அன்சாரி MLA, அதிகாரிகளிடம் கூறினார். சட்டமன்றத்தில் நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது குறித்து அவர் மூன்று முறை பேசியுள்ளதும், முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் அவர் நேரில் வலியுறுத்தியதும் குறிப்பிடதக்கது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 30.11.17
நாகப்பட்டிணம்
குவியும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை MLA…!
நாகை.நவ.29., நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சியில் நாகூருக்கு அருகே நகராட்சி வாகனங்களால் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து இன்று (29/11/2017) அப்பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகூர்ருக்கும், வாஞ்சூருக்கும் இடையில் உள்ள அப்பகுதியை நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு நகராட்சி ஆணையரை தொடர்புக் கொண்டு இனி அப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும், அதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும், இப்போது இருக்கும் குப்பைகளை விரைந்து அகற்றுமாறும் உத்தரவிட்டார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 29.11.17
முன்னாள் நாகூர் நகர தமுமுக நிர்வாகி மற்றும் பலர் மஜகவில் இணைந்தனர்!
நாகை. நவ.25., நாகூரில் நேற்று (24.11.17) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில், நாகூர் நகர முன்னாள் தமுமுக நிர்வாகி மொய்தீன் அப்துல் காதர், கோபால், செய்யது இப்ராஹிம், தமிம் அன்சாரி, ரஜ்வி, ரியாஸ் ஆகியோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந் நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை-முபாரக், மாவட்ட துணை செயலாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழில் சங்க செயலாளர் அல்லாபிச்சை, IKP புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர், நகர செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #நாகை_தெற்கு_மாவட்டம்.
தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் மஜகவில் இணைந்தனர்!
நாகை. நவ.23., கடந்த 21.11.17 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளார் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில், நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், வவ்வாலடி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயலாளர் N.முஹம்மது அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் Z. உசைனுதீன் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் . இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் H.ஷேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் M. பரகத் அலி , மாவட்ட துணை செயலாளர் A.H.M.ஹமீது ஜெஹபர் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரெக்ஸ் சுல்தான், திருமருகல் ஒன்றிய செயலாளர் A.முஜீபுர் ரஹ்மான் , நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம் 21.11.2017
ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை! தொகுதி ஆய்வில் நாகை MLA உறுதி!
நாகை. நவ.22., நேற்று (21.11.17) நாகை ஒன்றியம் மஞ்சக்கொல்லை ஊராட்சி பகுதியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். புத்தூர் வடமலையான் தோட்டம் குடியிருப்பு பகுதிகளில் வடிகால் இல்லாமல் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு, புத்தூர் ஆட்டோ ஸ்டண்ட் அருகில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். மேலும், அங்கு ஒரு குளம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விவசாய சங்க நிர்வாகி மூர்த்தி அவர்கள் MLA-விடம் கூறினார். உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு, இது சம்பந்தமாக அறிக்கை தயார் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடமும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பில் MLA அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், மஜக மற்றும் அதிமுகவினர் உடன் இருந்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 22.11.17