நாகை. ஏப்.22., அரசு மருத்துவமனையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் O.S மணியன் திறந்து வைக்க சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ICU நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள், மருத்துவமனையில் ஆங்காங்கே படுத்துறங்குவதை தவிற்பதற்காக, நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மட்டுமே தங்குவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 840 ச.மீட்டரில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 90 பேர் தங்கிக் கொள்ளலாம். சமையலறை, குளியளறை பொருள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகலும் இருக்கிறது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 22.04.2018
நாகப்பட்டிணம்
ஆசிபாவிற்கு நீதிகேட்டு தோப்புத்துறையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!
வேதை.ஏப்.20., இன்று (20/04/2018) காஷ்மீரில் எட்டு வயது சிறுமி #ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நாகை தெற்கு மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மஜக நகர செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர். இதில் சகோதரி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கவேண்டும் உள்ளிட்ட பதாகைகளை சிறுவர், சிறுமியர்கள் ஏந்திய வாறு கோஷமிட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேதை_நகரம் 20.04.2018
நாகரீக அரசியலுக்கு உகந்ததல்ல…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து மறைமுகமாக ட்விட்டரில் பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா வெளியிட்ட கருத்து அநாகரீகத்தின் உச்சமாகும். கலைஞர் உடல் நலமின்றி, அரசியலிருந்து ஏறத்தாழ ஒதுங்கியிருக்கும் நிலையில் அவர் மீது தொடுத்திருக்கும் தனி நபர் தாக்குதல்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். அக்கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாகரீக வளர்ச்சியின் வழியாகவே, அரசியல் முதிர்ச்சியும், பண்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களும், தனி நபரை வீழ்த்த முன்னெடுக்கப்படும் தரங்கெட்ட முயற்சிகளும் பொது வாழ்வுக்கு எந்த விதத்திலும் சிறப்பு சேர்க்காது. கொள்கை ரீதியான விமர்சனங்கள் மட்டுமே, ஒருவரின் அரசியல் தரத்தை மதிப்பீடு செய்யும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.04.18
மயிலாடுதுறையில் கிருஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
நாகை. ஏப்.18., நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு கிருஸ்துவ அமைப்பு ஒன்றிணைந்து, தேவாலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மஜக, திமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்ற உந்துதலில் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடெங்கிலும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவாலயங்களை தாக்குகின்றார்கள். கிருஸ்துவர்கள்தான் நம் நாட்டிற்க்கு கல்வியையும், மருத்துவமனைகளையும் கிராமங்கள்வரை கொண்டு சேர்த்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம், வட இந்தியாவில் உள்ள பெரும்பான்மை் மக்களை அணித்திரட்டலாம் என நம்புகிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்ளுக்கும் பெரும்பான்மையான இந்து சமுதாய மக்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்து ஏக்தா மர்ச் என்ற அமைப்பினர் காஷ்மீரில் கோவிலில் வைத்து 8 வயது ஆசிபா என்ற குழந்தையை சீரழித்து இருக்கிறார்கள். இந்த படுபாவிகளுக்கு ஆதரவாக பாஜகவின் அமைச்சர்களே பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த நாட்டில் உள்ள இந்துகளும், உலக
நாகை பாரதிதாசன் பல்கலை கழக ஆண்டு விழா.. நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..!
இன்று (17/04/2018) நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி யின் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முணைவர் மணலி ச.சோம சுந்திரம், பொறுப்பு முதல்வர் முணைவர் ரெ.ராமு, தமிழ்துறை தலைவர் து.சொக்க லிங்கம், வணிக வேளாண்மைத்துறை தலைவர் பேரா.ஜெ ஜெயந்தி, தமிழ்துறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தகவல்;#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்17.04.2018