சென்னை.மே.09.,காஷ்மீரில் அரசுப்படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கல்வீச்சில் படுகாயமடைந்து உயிர் துறந்த தமிழர் திருமேனி செல்வன் அவர்களின் உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் உடல் இறுதி சடங்குகாக எடுத்து வரப்பட்டது. அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சி (#மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு, அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுதர்சனம் அவர்களும் அங்கு வந்திருந்தனர். பொதுச்செயலாளருடன் மஜக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், பொருளாளர் செய்யது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், ஆவடி நகரச்செயலாளர் சாகுல் ஹமிது, பொருளாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் தேவகாந்தி பாபு மற்றும் சதாம் உசேன், கபீர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 09.05.2018
நாகப்பட்டிணம்
நன்றி அண்ணே…! “நீட்” தேர்வு எழுதிய பிரியதர்ஷினி நாகை MLA வுக்கு நேரில் நன்றி!
நாகை தொகுதியிலிருந்து "நீட்" தேர்வு எழுத செல்பவர்களுக்கு முழு தொகையும் "ஸ்பான்சர்கள்" வழங்கப்படும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அறிவித்தார். இதில் 5 பேர் உதவிகளை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத சென்றனர். கேரளாவிலிருந்து முதலில் திரும்பியுள்ள மாணவி பிரியதர்ஷினி, நாகை வந்து இறங்கியுள்ளார் தமிமுன் அன்சாரி MLA அவர்களை, தனது அப்பா வெங்கட் மற்றும் தம்பியுடன் வந்து நெகிழ்ச்சியுடன் "நன்றி" அண்ணே…… என்று கூறினார். "நீட்" தேர்வில் பெற்றிப்பெற MLA அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும்! வெல்லட்டும் வெல்லட்டும்! சமூக நீதி வெல்லட்டும் தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம், 09/05/2018.
ஜாக்டோ – ஜியோ போராட்டகாரர்கள் கோரிக்கைகளின் மீது தமிழக அரசு கவனம் எடுக்க வேண்டும்..! மஜக கோரிக்கை…!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி #ஜாக்டோ_ஜியோ அமைப்பை சேர்ந்த #அரசு_ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை பேசி தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் சுமுகமான முறையில் இப்பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தை ஒடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 08/05/2018.
மகன் நீட் தேர்வு எழுதும்போது தந்தை அதிர்ச்சி மரணம்! குடும்பத்தை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி MLA ஆறுதல்!
திருவாரூர்.மே.06., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்னசாமி . அவர் தனது மகன் கஸ்தூரி மாகாலிங்கத்தை #நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாக்குளம் அழைத்துச் சென்று இருக்கிறார். மாநிலம் விட்டு மாநிலம் சென்ற மனசோர்வும், வெயிலினால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை வாட்டியிருக்கிறது. இன்று காலை அவரது செல்ல மகன் எர்னாகுளத்தில் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. மகனோ தன் தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார். இத்துயரச் செய்தி தெரிந்ததும், நாகப்பட்டினத்திலிருந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முதல் நபராக அந்த கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூறினார். அவருடைய மனைவியும், மகளும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் திருத்துறைப்பூண்டி MLA ஆடலரசன் அவர்களும், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்களும் வந்து சேர்ந்தனர். அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் #மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூறியதாவது.. இச்சம்பவம் அனிதாவை தொடர்ந்து, இன்னொரு துயரத்தை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஏற்படுத்திருப்பதாக கூறினார். இது போன்ற குடும்பங்களின் சாபமும், கண்ணீரும் மோடி அரசையும், மத்திய அரசையும் சும்மா விடாது
கோடை விடுமுறையில் பயிற்சி வகுப்புகளை அனுமதிக்க கூடாது..! மஜக தமிழக அரசுக்கு கோரிக்கை..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) பள்ளிக்கூட மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக இருக்கிறது. பாட சிந்தனைகள், புத்தக சுமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மே மாதம் முழுவதையும் தங்களின் மகிழ்ச்சியான பொழுது போக்குக்காக ஒதுக்குகிறார்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, உறவினார்களின் இல்லங்களுக்கு சென்று தங்குவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, விழாக்களில் பங்கேற்பது என மனதை உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள் . இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் மே மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு #சிறப்பு_பயிற்சி_வகுப்பு-களை நடத்துகிறார்கள். இந்த போக்கு இப்போது அரசு பள்ளிகளிலும் பரவியிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக மே மாத கோடை விடுமுறை அளிக்கப்படுகிறதோ. அதற்கு எதிராக சில பள்ளிக்கூடங்கள் செயல்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இதை பெற்றோர்கள் விரும்பவில்லை மாணவ, மாணவிகளும் விரும்பவில்லை. எனவே, கடும் கோடை வெயிலில் பிள்ளைகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும், சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளிக்கூடங்களும், தனியார் பள்ளிக்கூடங்களும் நடத்த தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். சிறப்பான முறையில் செயல்படும் #பள்ளிக்_கல்வித்_துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு.செங்கோட்டையன் அவர்கள், இது குறித்து தமிழக முதல்வருடன் பேசி உரிய