நாகை.ஆக.29., நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், சங்கரன் பந்தல் அருகேயுள்ள இலுப்பூர் கடை வீதியில் உத்திரங்குடி ஊராட்சி, இலுப்பூர் ஊராட்சி, எரவாஞ்சேரி ஊராட்சி, நெடுவாசல் ஊராட்சி, விசலூர் ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகள் இணைந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ச.தியாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி வளர்ச்சி அலுவலர் எம்.எஸ்.அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ஜகைர், ஊராட்சி செயலாளர்கள் விஸ்வ நாதன்,சத்தியா, விஜய லெட்சுமி, முத்து குமரன், மாதவன் ராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மஜக நாகை வடக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சங்கை தாஜ்தீன் பங்கேற்று தூய்மை என்ற தலைப்பில் பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி. #MJK _IT_WING. #நாகை_வடக்கு_மாவட்டம்.
நாகப்பட்டிணம்
நாகையில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பரப்புரை..!
நாகை.ஆக.25., நாகப்பட்டினத்தில் இன்று நெகிழி (Plastic) பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க கோரியும், மாற்று தயாரிப்புகளை பயன்படுத்த கோரியும் மாணவ. , மாணவிகள் பங்கேற்ற பரப்புரை ஊர்வலத்தை அமைச்சர் o.S. மணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 25.08.18
விபத்துகளை தடுக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் மஜக வினர் மனு..!
கோவை.ஆக.25., பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மீன்கரை ரோடு சீனிவாசபுரம் அருகில் தரைபாலத்தில் அதிகமாக விபத்துகள் ஏற்படுகிறது அதை தடுக்க மீன்கரை பிரதான சாலையிலிருந்து சீனிவாசபுரம் செல்லும் சாலையை சீர்படுத்தி தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி 04.08.17 அன்று மனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் இன்று (24.08.2018) நினைவூட்டல் மனு பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, தலைமையில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி செயலாளர் ப.மன்சூர், பேரூராட்சி பொருளாளர் கா.செந்தில்குமார், நகர துணை செயலாளர்கள் ச.அன்சார், சா.அப்பாஸ், நகர மாணவர் இந்தியா செயலாளர் சு.அலாவுதீன், நகர மருத்துவ அணி செயலாளர் அ.ஜான்ஸ்கான், நகர வர்த்தக அணி துணை செயலாளர் அ.அன்வர்சாதிக், பேரூராட்சி இளைஞரணி செயலாளர் அப்துல் நாசர், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாக பொறுப்பாளரிடம் மனு அளித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 24.8.18
வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதியாக மஜகவிடம் 10,000 ஒப்படைப்பு.
நாகை.ஆக.21., வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக அந்த பள்ளியின் முத்தவல்லி அவர்கள் 10000/- தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். நாகை வடக்கு மஜக பொறுப்பாளர் ஹாஜா சலீம் மற்றும் உள்ளூர் ஜமாத்தார்கள் உடன் இருந்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING #நாகை_வடக்கு_மாவட்டம்
ஒரு மாத MLA சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கினார் நாகை MLA தமிமுன் அன்சாரி! மேலும் நிவாரண உதவிப் பொருள்களை அளிக்குமாறு தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்!
நாகை.ஆக.20., இன்று (20.08.2018) நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியாதவது : எமது மனிதநேய ஜனநாயக கட்சியினரின் அறிவுறுத்தலின் படி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது 1 மாத MLA சம்பளத்தை நிவாரண உதவிக்காக வழங்குகிறேன். மேலும் நாகப்பட்டிணம் தொகுதிக்குட்பட்ட மக்கள் கேரளவுக்காக தங்களது நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகிறேன். கைலிகள், நைட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், நாப்கீன்கள், பிஸ்கட் பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலை 11 முதல் மாலை 7 மணி வரை நாகை MLA அலுவலகத்தில் இன்றிலிருந்து 1 வாரத்திற்குள் வழங்கலாம். பழைய பொருள்களை தவிர்க்க வேண்டுகிறோம். இப்பொருள்கள் நாகையிலிருந்து ரயில் மூலம் கேரளா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கேரளாவின் வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து, துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். எல்லா உதவிகளையும் கேரள மக்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வெறும் 500 கோடியை மட்டும் மத்திய அரசு கேரளாவுக்கு ஒதுக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு மாற்றான் தாய் மனநிலையில் செயல்படுவதாக சந்தேகம் வருகிறது. அங்கு 20 ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை