நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்..! மஜக பங்கேற்பு..!!

நாகை.ஆக.29., நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், சங்கரன் பந்தல் அருகேயுள்ள இலுப்பூர் கடை வீதியில் உத்திரங்குடி ஊராட்சி, இலுப்பூர் ஊராட்சி, எரவாஞ்சேரி ஊராட்சி, நெடுவாசல் ஊராட்சி, விசலூர் ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகள் இணைந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ச.தியாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி வளர்ச்சி அலுவலர் எம்.எஸ்.அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ஜகைர், ஊராட்சி செயலாளர்கள் விஸ்வ நாதன்,சத்தியா, விஜய லெட்சுமி, முத்து குமரன், மாதவன் ராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மஜக நாகை வடக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சங்கை தாஜ்தீன் பங்கேற்று தூய்மை என்ற தலைப்பில் பேசினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#நாகை_வடக்கு_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*