ஜனவரி:02., அமெரிக்காவில் வசிக்கும் தமிழக மக்கள் பல்வேறு பொது சேவை அமைப்புகளை முன்னின்று நடத்தி வருகிறார்கள். புத்தாண்டு, பொங்கல், பெருநாள் ஆகிய தினங்களில் நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தி வருகிறார்கள். நேற்று 2021 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ° Tamul" என்ற அமைப்பு நடத்திய அறிவு சார் கருத்தரங்கில் தமிழகத்தை சேர்ந்த பல தலைவர்கள், அறிஞர்கள் காணொளி வழியே பங்கேற்றனர். அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உலக அமைதி, சமாதானம் ஆகியவற்றை முன்னிறுத்தி மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார். உலக தமிழ் முஸ்லிம் மீடியா அமைப்பு நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வுகளில் உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் பங்கேற்று நிகழ்வுகளை கண்டு களித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 01.01.2021
அயலகச் செய்திகள்
MKP கத்தார் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்..!
கத்தார்.டிச.19., கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் ஷேக் அலாவுதீன் தலைமையில் (18-12-2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வை கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான ICBF-யின் தலைவர் திரு.பாபுராஜன் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கிவைத்தார். உடன் சிறப்பு அழைப்பாளராக QMF கத்தார் தலைவர் கடலூர் முஸ்தஃபா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை தலைமை செயற்குழு உறுபினர் கீழக்கரை ஹூசைன், உத்தமபாளையம் உவைஸ், திருப்பத்தூர் நிஸார், சிதம்பரம் நூர், மாயவரம் பாபு, மேலப்பாளையம் ( ஜூபைர், ஃபத்தாஹ், இக்பால் ) ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கத்தார் விசிக நிர்வாகிகள், கத்தார் தமஜக தலைவர் KST அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தன்னார்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்தனர். தகவல்; #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKPITWING #கத்தார்_மண்டலம் 18-12-2020
MKP அமீரகத்தின் அல் அய்ன் மாநகர் சார்பாக ஜூம்_காணொளி நிகழ்ச்சி! மஜக இணை பொதுச்செயலாளர் ஜே எஸ் ரிபாய் பங்கேற்பு..!
அமீரகம்.நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை அமீரகம் அல் அய்ன் மாநகர் சார்பாக Zoom கானொளியில் மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் பங்கேற்று "அரசியலில் நாம் கடந்து வந்த பாதை" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அல் அய்ன் மாநகர செயலாளர் S.முகமது இம்ரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீரக செயலாளர் A.அசாலி அஹமது, அமீரக ஆலோசகர் J.ஷேக்தாவுத், அமீரக பொருளாளர் A.அபுல்ஹன், அமீரக இணைச் செயலாளர் A.ஜாகிர் ஹூசைன் மற்றும் ஒமான் மண்டல பொருப்பாளர் M.முஹம்மது ஜவ்ஹதாத் மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உற்சாகமுடன் பெருவாரியாக கலந்து கொண்டனர். இறுதியாக அல் அய்ன் மாநகர பொருளாளர் M.அப்துல் நாசர் நன்றி கூறி நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவுற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKPITWING #அமீரகம் 31-10-2020
MKP அமீரக செயற்குழு கூட்டம்!
ஆக.26., மனிதநேய கலாச்சார பேரவையின் ஐக்கிய அரபு அமீரக செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக மண்டல பொருளாளர் H.அபுல்ஹசன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அமீரக ஆலோசகர் மதுக்கூர் அப்துல் காதர், அவர்கள் முன்னிலை வகிக்க அமீரக செயலாளர் அசாலி அஹமது, அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மனிதநேய கலாச்சார பேரவையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் அப்துல் ரஜாக், ஜியாவுல் ஹக், முஹம்மது தைய்யூப், ரஹ்மதுல்லாஹ், அடியற்கை யூசுப்தீன், ஹம்தான், சேக்தாவுது, அதிரை அஸ்ரப்அலி, பூதமங்கலம் ஜாகிர் உசேன், எலந்தங்குடி முகமதுயூசுப், கட்டிமேடு ஜாஹீர் உசேன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல். #தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #அமீரக_மண்டலம் 23.08.2020
குவைத் மண்டலம் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி.!
குவைத்-ஆகஸ்ட்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ZOOM காணொளி மூலம் 31-07-2020 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்க மண்டல துணைச் செயலாளர் மாயவரம் சபீர் அஹமது அவர்கள் நீதிபோதனை வழங்க கோணுலாம்பள்ளம் அன்சாரி வரவேற்ப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி J.S.ரிபாய் ரஷாதி அவர்கள் "நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் Zoom காணொலி மூலம் திரளான மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தூம் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல் : #மனிதநேய_கலாச்சார_பேரவை #குவைத்_மண்டலம் 31-07-2020