MKP அமீரகத்தின் அல் அய்ன் மாநகர் சார்பாக ஜூம்_காணொளி நிகழ்ச்சி! மஜக இணை பொதுச்செயலாளர் ஜே எஸ் ரிபாய் பங்கேற்பு..!


அமீரகம்.நவ.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை அமீரகம் அல் அய்ன் மாநகர் சார்பாக Zoom கானொளியில் மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் பங்கேற்று “அரசியலில் நாம் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அல் அய்ன் மாநகர செயலாளர் S.முகமது இம்ரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீரக செயலாளர் A.அசாலி அஹமது, அமீரக ஆலோசகர் J.ஷேக்தாவுத், அமீரக பொருளாளர் A.அபுல்ஹன், அமீரக இணைச் செயலாளர் A.ஜாகிர் ஹூசைன் மற்றும் ஒமான் மண்டல பொருப்பாளர் M.முஹம்மது ஜவ்ஹதாத் மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உற்சாகமுடன் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

இறுதியாக அல் அய்ன் மாநகர பொருளாளர் M.அப்துல் நாசர் நன்றி கூறி நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKPITWING
#அமீரகம்
31-10-2020