You are here

அறந்தாங்கி தொகுதியில் 15 இடங்களில் மஜக கொடியேற்றம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA ஏற்றினார்!


நவ.02.,

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் குறித்த இந்த விழிப்புணர்வு பயணத்தில், அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், விவசாய அணி மாநிலச் செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை உட்பட 130 கிலோ மீட்டர் தூரம், 4 மணி நேரம் நடைபெற்ற தொடர்ச்சியான இந்நிகழ்வில் , 15 இடங்களில் மஜக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. மஜக வினர் திரளானோர் ஏராளமான வாகனங்களில் பங்கேற்றனர்.

மீமிசல் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் ஒன்றிய அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டது.

கட்டு மாவடி, ஏகனி வயல்,நாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மீமிசல், கோபால பட்டினம், ஜெகதா பட்டினம், கோட்டை ப்பட்டினம், அம்மா பட்டினம் ஆகிய ஊர்களில் திரளான பொது மக்கள் ஆதரவோடு பொதுச் செயலாளர் அவர்கள் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தார்.

ECR சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், காவல் துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது.

இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒளி முகம்மது, செய்யது அபுதாஹிர், ஷாஜுதீன், நகர செயலாளர் ஜலாலுதீன், நகர பொருளாளர் அப்துல் கரீம், IKP மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர்கனி, MJTS மாவட்ட தலைவர் முகம்மது குஞ்சாலி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
31-10-2020

Top