மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு இறுதி நிகழ்வில் மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!


நவ.02,
மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல் நல்லடக்கம் தஞ்சை மாவட்டத்தில் அவரது சொந்த ஊரில் நேற்று நடைப்பெற்றது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக நிர்வாகிகள் மறைந்த அமைச்சரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது அங்கு வருகை தந்த அமைச்சர்கள் காமராஜ் மற்றும் வெள்ளமண்டி நடராஜன் ஆகியோரிடம் மஜக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில் மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் முகமது மஃரூப், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் ஷா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முகமது அலி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஸ்ரப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.