எழுச்சியோடு நடைபெற்ற மஜக தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம்!! மாநில பொருளாளர் மற்றும் இணை பொதுச்செயலாளர் பங்கேற்பு!!


தென்காசி:நவ.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முன் ஏற்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1).உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷா என்ற தலித் பெண்மணியை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்.

2).உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிக்கையாளரை மிரட்டுவதும் தாக்குவதையும் அரசு தடுத்து நிறுத்தி பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும்.

3).தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்து மக்களும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அமைக்க வேண்டும்.

4)மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகள் கூறும் திருத்தங்களுடன் அதை அமல்படுத்த வேண்டும்.

5).கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் இக் கூட்டம் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் அரசின் வழி காட்டலை அவசியம் பின்பற்ற வேண்டும்.

7) தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பாஜக நடத்தவிருக்கும் வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம் மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், பைம் பொழில் அபுதாஹிர் வாவை இனாயதுல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் M.முஹம்மது இஸ்மாயில், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சங்கை A.பீர் மைதீன், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் P.முகமது அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க மாவட்ட தலைவர் P.ரவி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் அச்சன் புதூர் மகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிலம்பட்டம் சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் கமால் தீன், தென்காசி ஒன்றிய செயலாளர் அபுபக்கர், தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், கடைய நல்லூர் நகர செயலாளர் சுல்தான், புளியங்குடி நகர செயலாளர் செய்யது அலி, சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், அச்சன்புதூர் நகரச் செயலாளர் முஹமது நாசர்,வடகரை நகர செயலாளர் முஹம்மது இல்யாஸ், மேலும் 100 மேற்பட்ட மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
01.11.2020