உயர்கல்வியே அதிகாரத்தில் அமர உதவும்! வாணாதிராஜபுரத்தில் ஜமாத் சந்திப்பில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


நவ. 02,

மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு ஜமாத் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜாமிஆ பள்ளியில், ஜமாத் முத்தவல்லி நூர் முகம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், உயர்கல்வி பெறுவதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், அதிகார மையங்களில் அமர்வதற்கு அதுதான் துணை நிற்கும் என்றும் சிறந்த கல்வி அறிவோடு வெளிநாடுகளுக்கு செல்லும் போது நல்ல சம்பளத்தில் உயர் வேலைகளும் கிடைக்கும் என்றும் கூறினார். இதற்கு ஜமாத்தார்கள் அக்கறை காட்ட வேண்டும் என்றும், பள்ளியிலேயே கல்வி வழிகாட்டி முகாம்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உணர்ச்சிகளில் கொந்தளிப்பதை விட, அறிவோடு நிதானமாக பணியாற்றுவதே வெற்றிகளை தரும் என்றும் கூறினார்.

பிறகு ஜமாத்தினர் தந்த கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜமாத் நூரியா தெரு முத்தவல்லி ஏ.அப்துல் ஜெலில், நாகை மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் இமாம் யாகூப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு லிபாஸ் அஹமது மற்றும் ரியாஸ் அஹமது ஆகியோரின் கடைகளை பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்.

முன்னதாக மாயவரம் நகர செயலாளர் சதீஷ் அவர்களின் இயற்கை பொருள் கடைக்கு சென்று அவருக்கு பொதுச் செயலாளர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளை மாவட்ட விவசாய அணி செயலாளர் ஹாஜா சலீம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதின், பொருளாளர் தைக்கால் ஷாஜஹான் ,மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மல் உசேன், ஷாஜஹான், அசேன் அலி, இஃப்ராஹிம், மிஸ்பாஹீதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஜெப்ரூதீன் , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீருல் அஸ்லம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் லியாகத் அலி,வாணாதிராஜபுரம் கிளை பொறுப்பாளர் இதயத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.