குவைத் மண்டலம் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி.!


குவைத்-ஆகஸ்ட்.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ZOOM காணொளி மூலம் 31-07-2020 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்க மண்டல துணைச் செயலாளர் மாயவரம் சபீர் அஹமது அவர்கள் நீதிபோதனை வழங்க கோணுலாம்பள்ளம் அன்சாரி வரவேற்ப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி J.S.ரிபாய் ரஷாதி அவர்கள் “நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள்” என்ற தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் Zoom காணொலி மூலம் திரளான மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தூம் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல் :
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#குவைத்_மண்டலம்
31-07-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*