குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு கூட்டம் கடந்த 14/10/2016 வெள்ளிக்கிழமை முர்காபில் நடைபெற்றது. கிராஅத் சகோ. தாரிக் அஹமது அவர்கள், வரவேற்புரை சகோ. கமருதீன் அவர்கள், தலைமை சபியுல்லாஹ் அவர்கள், சிறப்பு அழைப்பாளராக மண்டல து. செயலாளர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார். மேற்ப்பார்வையாளராக ஃபர்வானியா கிளை செயலாளர் சகோ. மாயவரம் சபீர் அவர்களும், ஃபாஹில் கிளை செயலாளர் சகோ. யூசுப்தீன் அவர்களும் கலந்து கொண்டனர். மண்டல ஆலோசகர் முசாவுதீன் முன்னிலையில் கிளை நிர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் முர்காப் கிளை செயலாளராக சகோ. சபியுல்லாஹ் பொருலாளராக சகோ. கமருதீன், து.செயலாளர்கள் சகோ.தாரிக் அஹமது, சகோ. சதாம் உசேன், சகோ. சீமான் மக்கள் தொடர்பு செயலாளர் சகோ அஹமது அமீர்கான், மீடியா செயலாளர் சகோ ரமலான், மருத்துவ அணி செயலாளர் சகோ. ரியாஸ்கான் ஆகியோர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு தர்பியா நல்லொழுக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாக அஹமது அமீர்கான் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவுபெற்றது. தகவல் : மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஊடக பிரிவு, குவைத் மண்டலம்.
Author: admin
மாணவர் இந்தியா சார்பில் கட்டுரை ஓவிய போட்டிகள்..
கடலூர் வடக்கு மாவட்ட மாணவர் இந்தியா(பதிவு செய்யப்பட்டது) சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி A.P.J அப்துல் கலாம் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணிவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்ராக அரிமா சங்க தலைவர் திரு. C. லட்சுமிநாராயணன், செயலாளர் திரு. R.அன்வர்தீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்ப்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.S.A.ஜேக்கப், உடற்கல்வி இயக்குநர் திரு. அசோகன் சிறப்பாக செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாணவார் இந்தியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு கடலூர் வடக்கு மாவட்டம்.
தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் மமக-விலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்…
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மமக மாவட்ட துணை செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் பேராவூரணி தொகுதி முக்கிய நிர்வாகிகள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். அத்துடன் பட்டுக்கோட்டையில் ஏராளமான கிறித்தவ சமுதாய சகோதரர்களும் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு தஞ்சை தெற்கு
தஞ்சாவூரில் விவசாய அமைப்புகளின் போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர்!
அக்.14., இன்று தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், IJK சார்பில் சிமியோன் ஆரோக்கியராஜ், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேரா.ஜெயராமன், தமிழர் தேசிய முன்னணி சார்பில் அயனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க சார்பில் மணிமொழியன், மமக சார்பில் தஞ்சை கலந்தர், தோழர் முகிலன், மருத்துவர் பாரதிசெல்வர், உழவர் உரிமை இயக்க மாநில செயலாளர் புலவர் தங்கராசு மற்றும் தமிழ் உணர்வாளர்களும், விவசாய சங்க தலைவர்களும் கலந்துக் கொண்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு தஞ்சை மாவட்டம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்!
நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரியில் அரசினர் தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வருகை தந்த M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் வகுப்பிற்கு வருகை தந்து அந்த குழந்தைகளுடன் அளவளாவினார். அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அக்கறையோடு விசாரித்தார். இக்குழந்தைகளை பராமரிப்பது இறைவனுக்கு மிகவும் பிடித்த காரியம் என்றும், அரிய சேவை என்றும் ஆசிரியர்களிடம் கூறினார். இக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என்றும், அரசு உதவிகளையும் தாண்டி இக்குழந்தைகளுக்கான உதவிகள் மஜக மூலம் செய்து தரப்படும் என்றும் கூறினார். காது கேளாதா, வாய்பேச முடியாத, கைகால் குறையுள்ள, மூளைத்திறன் குறைந்த பல தரப்பட்ட குழந்தைகளும் ஒரு வகுப்பில் கூடியிருந்தும், தங்களுக்குள் மாசற்ற அன்பை பரிமாறிக் கொள்வதும் உள்ளங்களை உணர்வுகளால் உசுப்பியது. அந்த வகுப்பிலிருந்து விடைபெற்றப் போது இதயம் கனமாகவே இருந்தது. MLA அவர்கள் ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்தனியாக பேசி அவர்களை மனம் நெகிழ தட்டிக்கொடுத்தார். இறைவன் இக்குழந்தைகளுக்கு அருள் புரியட்டும்! தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்