ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் ஷானவாஸ் தலைமையில் நடைப்பெற்றது இதில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் நஜிர் பேக், அந்தியூர் நகர பொருளாளர் மைதீன்பேக், துணை செயலாளர்கள் முஹம்மது அனிப், இப்ராஹிம், இளைஞரணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு ஈரோடு மேற்கு
Author: admin
மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி! மஜக வாழ்த்து!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள்வெளியிடும் பத்திரிகை அறிக்கை) தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களிலும் தொடர்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக இவ்வெற்றி அமைந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறையருளால் உடல்நலம் முன்னேறியிருக்கும் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு இவ்வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை. மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 22/11/2016
ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு…
திண்டுக்கல்லில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்பு !
திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமாவின் ஒருங்கிணைப்பில் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினரும் பங்கேற்றனர். பலவேறு சமூகங்களை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.
உடுமலைப்பேட்டையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பெருந்திரள் பொதுக்கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜமாத்துல் உலமாவின் ஏற்பாட்டில் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துகுளம் ஜமாத்தார்கள் பெருந்திரளாக குவிந்தனர். இப்பொதுக்கூட்டத்தில் மஜக பொது செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, பள்ளப்பட்டி அரபிகல்லூரி பேராசிரியர் ஹபீப் முஹம்மது தாவூதி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, திருப்பூர் மாவட்டம்.