You are here

மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி! மஜக வாழ்த்து!

( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள்வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களிலும் தொடர்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக இவ்வெற்றி அமைந்திருக்கிறது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறையருளால் உடல்நலம் முன்னேறியிருக்கும்  மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு இவ்வெற்றி கூடுதல்  மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை.

மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A.,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
22/11/2016

Top